Categories: சினிமா

என்னுடைய இயக்கத்தில் உதயநிதி நடிக்காததற்கு இதுதான் காரணம்.. கிருத்திகா ஓபன் டாக்..!

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரும் தயாரிப்பாளருமாக வளம் வந்தவர் தான் உதயநிதி ஸ்டாலின். தற்போது நடிப்பிலிருந்து விலகிய அரசியலில் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். தமிழக துணை முதல்வராக இருந்து வரும் உதயநிதி சினிமாவிலிருந்து முற்றிலும் விலகி விட்டார். இருந்தாலும் அவரின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தொடர்ந்து பட தயாரிப்பிலும் விநியோகத்திலும் ஈடுபட்டு வருகின்றது.   வணக்கம் சென்னை என்ற திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர்தான் கிருத்திகா உதயநிதி. அதன்பிறகு விஜய் ஆண்டனியை வைத்து காளி என்ற திரைப்படத்தை இயக்கினார். மேலும் பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடரையும் அவர் இயக்கியுள்ளார்.

இறுதியாக இவர் ஜெயம் ரவி மற்றும் நித்தியா மேனனை வைத்து காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தை இயக்கி இருந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக கிருத்திகா உதயநிதி விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இப்படியான நிலையில் கிருத்திகா உதயநிதியை கடந்த 2020 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

தற்போது கிருத்திகா சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்க உதயநிதி சினிமாவை விட்டு விலகி அரசியலில் கலக்கி கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் கிருத்திகா உதயநிதி சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் கணவரை வைத்து படம் இயக்காததற்கு என்ன காரணம் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், அன்னைக்கு ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசும்போது கூட உதயநிதி சொன்னாரு, நான் கதை கேட்கும் போதெல்லாம் மிர்ச்சி சிவா, விஜய் ஆண்டனி என அனைவருக்கும் ஒரு ஹீரோ காதல் கதை சொல்றீங்க.

விஜய் ஆண்டனிக்கு காதல் கதையை சொல்லி மூன்று ஹீரோயின் நடிக்க வைக்கிறீங்க. ஆனா நான் கேட்டா மட்டும் க்ரைம் தில்லர் கதையை சொல்லி ஹீரோயின் இல்லாத ஒரு கதையில கிருத்திகா நடிக்க சொல்றாங்க என்று என்னைப் பற்றி பேசி இருந்தார். இருவருமே சுதந்திரமாக வேலை பார்க்கும் போது வீட்டில் நிம்மதியாக இருக்கும். ஆனா ரெண்டு பேருமே ஒரே சமயத்துல ஒண்ணா வேலை பாக்கும்போது அது பெரிய தலைவலியா மாறிவிடும். இதனால தான் என்னுடைய இயக்கத்தில் உதயநிதி நடிக்கவில்லை என்று கிருத்திகா அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

ரூ.1.45 கோடி கார்ப்பரேட் வேலையை தூக்கி எறிந்த பெண்… 4 மாத நாய் நடைப்பயிற்சி தந்த மாபெரும் மாற்றம்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…

9 minutes ago

அய்யய்யோ… யாரும் பாக்கலன்னு நினைச்சியாடா?… பட்டப்பகலில் கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு… மஹிந்திரா தார் டயரை தூக்கிய நபர்… CCTV-யில் சிக்கிய வீடியோ வைரல்…!!

ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…

12 minutes ago

திக் திக் திக்… 7 ஆண்டுகள் அறைக்குள் பூட்டி வைத்த கொடூரன்… கொரோனா காலத்தில் தப்பிய சிறுமி… அம்பலமான பகீர் உண்மை… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

கொடூரமாகக் கடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் இருண்ட உலகிற்குள் முடக்கப்பட்ட ஒரு சிறுமி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துணிச்சலாகத் தப்பித்துத் தன்…

18 minutes ago

ஐயோ… அம்மா, அப்பாவை அடிக்காதீங்க… நடுரோட்டில் பெற்றோர் சண்டை… கதறித்துடிக்கும் குழந்தைகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பொதுவெளியில் பெற்றோர்களுக்கிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்கள், அங்கிருக்கும் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைப்பதில்லை; மாறாக, அவர்களின் மன உலகைப்…

30 minutes ago

அச்சோ… மனிதநேயம் இன்னும் சாகல?… பசியோடு பிச்சைக்காரன் சொன்ன வார்த்தை… துறவியையே அழ வைத்த ஷாக்கிங் சம்பவம்… இணையத்தில் வைரல்…!

ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…

37 minutes ago

“விஜய் கொடுத்த ஷாக்… 2029-ஐ குறிவைக்கும் மாஸ்டர் பிளான்”… கலக்கத்தில் திமுக… பாஜகவுடன் ரகசியக் கூட்டணிக்குக் காய் நகர்த்தும் தலைமை?…. பரபரப்பு தகவல்…!

தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…

58 minutes ago