விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை பாவனி ரெட்டி. சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போதே சில காரணங்களால் அந்த சீரியலில் இருந்து இவர் விலகி விட்டார்.
கொஞ்சிக் கொஞ்சி தமிழ் பேசும் அழகான இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது. அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் உருவானது.
அந்த நிகழ்ச்சியில் ஆசை ஆசையாக திருமணம் செய்து கொண்டேன் ஆனால் திடீரென்று ஒரு நாள் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், இது நாள் வரை அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது எனக்கு தெரியாது, பிறந்ததிலிருந்து நான் அதிர்ஷ்டம் இல்லாதவள் என்று தண்ணீர் மல்க பேசி இருந்தார்.
இவருடைய இந்த பேச்சு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கலங்க வைத்தது. இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வைல்டு கார்டு போட்டியாளராக வந்த அமீர் பாவணியை காதலிப்பதாக கூறினார். ஆனால் நான் உன்னை விட பெரியவள் என அவர் காதலை ஏற்காமல் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவணி இருவரும் கலந்த கொண்ட போது அந்த நிகழ்ச்சியில் பாவணி அமீரின் காதலை ஏற்றுக் கொண்டார். தற்போது இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
அவர்களின் லிவ்விங் ரிலேஷன்ஷிப் சர்ச்சையாக பேசப்பட்டாலும் அதைப் பற்றி எல்லாம் இவர்கள் இருவரும் கவலைப்படாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து காதலர் தினத்தை முன்னிட்டு சமீபத்தில் நடிகை பாவணி ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமீருடன் கைகோர்த்தபடி இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு Comming soon என்று பதிவிட்டு இருந்தார்.
அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் திருமண தேதியா இல்லை புது படமா என்று கேட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் தங்கள் திருமண தேதியை அறிவித்தனர். அதன்படி ஏப்ரல் மாதம் பாவணியை கரம் பிடிக்க உள்ளதாக அமீர் அறிவித்தார். அமீர் மற்றும் பாவணி ஜோடியின் திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
அமீர் இஸ்லாமியராக இருந்தாலும் அவர் இந்து முறைப்படி தாலி கட்டி பாவணியை மனைவியாக ஏற்றுக் கொண்டார். இவர்களின் திருமணத்தில் தொகுப்பாளினி பிரியங்கா கலந்து கொண்டார். அவருக்கு அன்னையின் திருமணம் முடிந்த நிலையில் தன்னுடைய கணவருடன் வந்து அமீர் மற்றும் பாவனி திருமணத்தில் பிரியங்கா கலந்து கொண்டு இருந்தார்.
இவரை தவிர பிரபலங்கள் பலரும் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய நிலையில் தற்போது அமீர் மற்றும் பாவனி ஜோடியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில், பெட்ரோல் போடுவது போல நடித்து ஊழியரின் கவனத்தைத் திசைதிருப்பி செல்போனைத்…
பழிவாங்கும் உணர்ச்சி ஒருபோதும் நிலையான நீதியைத் தருவதில்லை; மாறாக, அது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வன்முறையையும் கண்ணீரையும் மட்டுமே கடத்துகிறது. கடந்த…
சாலையோரக் கடையில் ஆசையுடன் பழத்தைத் திருடிச் சாப்பிட முயன்ற குட்டி யானையைத் தடுத்து நிறுத்தி, அந்தப் பழத்தை மீண்டும் கடையிலேயே…
வடமேற்கு டெல்லியின் பிதம்பூரா பகுதியில் துபாயில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவரின் வீட்டை குறிவைத்து மர்ம நபர்கள் திடீர் தாக்குதல்…
ஆர்கென்டினா நாட்டின் பியூர்ட்டோ இகுவாசு வனப்பகுதியில், 70 வயது முதியவர் ஒருவர் டாக்ஸி காரில் சிறுமியுடன் அரை நிர்வாணமாக இருந்த…
குஜராத்தின் சூரத் மாநகரில் அமைந்துள்ள பாண்டேசரா பகுதியில், பொருள்களை விநியோகிக்கும் ஊழியருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே சாதாரணப் பேச்சாகத் தொடங்கிய கருத்து…