தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த தற்போது இளம் அரசியல்வாதியாக கலக்கி வரும் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா ஸ்டாலின். இவர் தமிழில் சிவா மற்றும் ப்ரியா ஆனந்த் நடிப்பில் வெளிவந்த வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தின் மூலமாக முதன்முதலாக இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனியை வைத்து காளி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். பின்னர் பெரியளவு திரைப்படங்களை இயக்காமல் இருந்து வந்த இவர் சமீபத்தில் பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரியஸ் ஒன்றை இயக்கியிருந்தார்.

#image_title
தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் கிருத்திகா ஸ்டாலின். தமிழக முதல்வரின் மருமகளும் எம்எல்ஏ மற்றும் நடிகரின் மனைவியுமான கிருத்திகா திரை துறையில் இருந்தாலும் வீட்டில் உள்ள அனைவரையும் மிகவும் கவனமாக பார்த்து வருகிறார். சினிமாவில் பாடல்கள், ஆல்பம் போன்றவற்றை இயக்குவதில் பிஸியாக இருந்து வரும் கிருத்திகா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், என்னை முதன்முதலாக இயக்குனராக பிள்ளையார் சுழி போட்டவர் மிஸ்கின் தான். அவரும் சசிகுமார் தான் பண்ணி குடுத்தாங்க. நான் உங்க கூட இருக்கேன். நீங்க தைரியமா பண்ணுங்கன்னு நம்பிக்கை குடுத்தாரு. உதய் தான் நான் சுமை சொல்லிட்டு சுத்துறேன்னு நினைச்சாரு.

டைரக்ட் பண்ண போறியான்னு அவரு தான் விமர்சனம் செஞ்சாரு. விடாமுயற்சியோடு கதை எழுதி 2 மூணு டைரக்டர் மீட் பண்ணுனேன். அவங்க நீங்க தான் ஷார்ட் பிலிம் பண்ணிருக்கீங்க அப்போ இதையும் நீங்க பண்ணலாம்னு சொன்னாங்க. அதுக்கப்புறமா தான் சின்ன சின்ன ஆர்ட்டிஸ்ட் வச்சி பண்ணினேன். அப்புறம் அதை எடுத்துட்டு போயி ரெட் ஜெயன்ட்ஸ் ல காட்டினேன். அவங்க தயவுசெஞ்சி நீயெல்லாம் டைரக்ஷன் வந்திடாதன்னு சொல்லிட்டாங்க. ஆனாலும் முயற்சியை கைவிடாம இருந்தேன். இரண்டாவது முறை அதே சீனை வைத்து வேறு ஒன்னு பண்ணி கொண்டு காட்டினேன். அதை பாத்துட்டு தான் அவங்களுக்கு ஒரு confidence வந்துச்சி.அதுக்கப்புறம் தான் அவங்க இவ நம்மள நிம்மதியா இருக்க விடமாட்டானு சொல்லி தான் வணக்கம் சென்னை எடுத்தேன்.

அதுக்கப்புறம் தான் எனக்கு நம்பிக்கையே வந்துச்சி. என் டைரக்ஷன் ல உதயநிதி நடிக்காததுக்கு காரணம் என்னன்னா அவரு கூட ஸ்டேஜ் ல கூட சொன்னாங்க. மத்த ஹீரோக்களுக்கெல்லாம் லவ் சப்ஜெக்ட் சொல்ராங்க. ஆனா எனக்கு மட்டும் ஹீரோயின் இல்லாம சொல்றங்கன்னு சொன்னாரு. அதுபோல தான் ரெண்டு பெரும் ஒரே துறையில இருக்குறதால வீட்லேயும் கொஞ்சம் நிம்மதியா இருக்கணும் என்று பேசியுள்ளார்.
