விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பாலா. நகைச்சுவையால் மக்கள் மனதில் தன்னிடம் பிடித்தார். ஏழை மக்களுக்கு உதவி செய்வது, ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வது என வருமானத்தை செலவு செய்தார். சமீபத்தில் கே.பி.ஒய் பாலா மீது பல விமர்சனங்கள் எழுந்தது. அதையெல்லாம் தாண்டி தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்கிறார்.
சமீபத்தில் கே.பி.ஒய் பாலா நடிப்பில் ரிலீசான காந்தி கண்ணாடி திரைப்படம் எதிர்பார்த்த அளவு மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் தொடர்ந்து உழைத்து வருகிறார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேபிஓய் பாலா ஒரு வீடியோ வெளியிட்டார். கணவர் இல்லாமல் தனி ஆளாக இரண்டு பிள்ளைகளை வளர்க்கும் தாய்க்கு தையல் மெஷின் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
