2 கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி நபருக்கு KPY பாலா செய்த உதவி.. அவரே பகிர்ந்த வீடியோ..!

By Nanthini on பிப்ரவரி 11, 2025

Spread the love

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களிடம் வரவேற்பு பெற்றார். வளர்ந்து வரும் நடிகராக சில படங்களில் நடித்திருக்கிறார். சமீப காலமாக கஷ்டப்படும் மக்களுக்கு ஒடியோடி உதவும் இவரது தங்கமான குணத்தை பார்த்து, மக்கள் பாராட்டி வருகின்றனர். முதலில், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள மலைவாழ் கிராம மக்களுக்காக இலவசமான ஆம்புலன்ஸ் வாகனங்களை சொந்த பணத்தில் வாங்கிக் கொடுத்து உதவினார்.

ஹீரோ ஆகும் KPY பாலா.. கனவை நிறைவேற்றிய முன்னணி நடிகர்! யார் தெரியுமா?

   

அடுத்து சென்னையில் கடந்த வருடம் ஏற்பட்ட கனமழையால், வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு தனது சொந்த பணத்தில் இருந்து ரூ. 5 லட்சம் வரை எடுத்து அவர்களுக்கு உதவினார் கேபிஒய் பாலா. அதாவது 340 குடும்பங்களுக்கு தலா ரூ. ஆயிரம் கொடுத்து உதவினார். மேலும் பல குடும்பங்களுக்கு பெட்ஷீட், பாய் தலையாணி, நைட்டீ, லுங்கி போன்றவற்றை வாங்கி தந்தார்.

   

KPY பாலா.. குடும்பத்துக்கு தலா ரூ. 1000.. மொத்தம் 2 லட்சம்.. என்னா மனுஷன்யா இவரு! - Thentamil

 

இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. இதில் எந்த விளம்பரமும் எனக்கு தேவையில்லை என்றும் அவர் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.  சென்னையில் பல்லாவரத்தை அடுத்துள்ள அழகாப்புதூர் பகுதியில் இலவச ஆட்டோ சேவை திட்டத்தை  தொடங்கி வைத்துள்ளார். அந்த ஆட்டோவில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், நோயாிகள், வயதானவர்கள் என வசதியற்ற மக்கள் இலவசமாக பயணிக்கலாம்.

Actor KPY Bala: இலவசமாகப் பயணிக்க ஆட்டோ வழங்கிய பாலா! - Gem Television

இப்படி தொடர்ந்து பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து சேவை செய்து வரும் பாலா தற்போது தன்னுடைய இரண்டு கைகளையும் இழந்து ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்த நபருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவருக்கு தனியாக அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொடுத்து சொந்தமாக ஜெராக்ஸ் கடை வைக்க உதவி செய்துள்ளார். இதனால் கலங்கிய அந்த மாற்றுத்திறனாளி நபர் பாலாவை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து தன்னுடைய அன்பை பரிமாறியுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பாலாவின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Balan Akassh Balaiyan Jaganathan பதிவைப் பகிர்ந்துள்ளார் (@bjbala_kpy)