விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களிடம் வரவேற்பு பெற்றார். வளர்ந்து வரும் நடிகராக சில படங்களில் நடித்திருக்கிறார். சமீப காலமாக கஷ்டப்படும் மக்களுக்கு ஒடியோடி உதவும் இவரது தங்கமான குணத்தை பார்த்து, மக்கள் பாராட்டி வருகின்றனர். முதலில், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள மலைவாழ் கிராம மக்களுக்காக இலவசமான ஆம்புலன்ஸ் வாகனங்களை சொந்த பணத்தில் வாங்கிக் கொடுத்து உதவினார். அடுத்து சென்னையில் கடந்த வருடம் ஏற்பட்ட கனமழையால், வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு தனது சொந்த பணத்தில் இருந்து ரூ. 5 லட்சம் வரை எடுத்து அவர்களுக்கு உதவினார் KPY பாலா.
அதாவது 340 குடும்பங்களுக்கு தலா ரூ. ஆயிரம் கொடுத்து உதவினார். மேலும் பல குடும்பங்களுக்கு பெட்ஷீட், பாய் தலையாணி, நைட்டீ, லுங்கி போன்றவற்றை வாங்கி தந்தார். இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. இதில் எந்த விளம்பரமும் எனக்கு தேவையில்லை என்றும் அவர் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். சென்னையில் பல்லாவரத்தை அடுத்துள்ள அழகாப்புதூர் பகுதியில் இலவச ஆட்டோ சேவை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அந்த ஆட்டோவில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், நோயாிகள், வயதானவர்கள் என வசதியற்ற மக்கள் இலவசமாக பயணிக்கலாம்.
இப்படி ஏழை எளியோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை எல்லாம் செய்து வரும் பாலா தற்போது ஒரு படத்தில் நாயகனாகவும் நடிக்க உள்ளார். அது தொடர்பான அறிவிப்பு கூட போஸ்டருடன் சமீபத்தில் வந்திருந்தது. நிஜத்தில் ஹீரோவாக வாழ்ந்து கொண்டிருக்கும் பாலாவை படத்தில் ஹீரோவாக பார்க்க அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படியான நிலையில் பாலா கோடை வெயிலில் துணிகளை தேய்த்து சிரமப்படும் ஒரு நபருக்கு தனது கடையை மேம்படுத்துவதற்கும் பணம் கொடுத்து உதவியது மட்டுமல்லாமல் புது அயன் பாக்ஸ் வாங்கி கொடுத்துள்ளார். இதனைக் கண்டு அந்த நபர் கண்ணீர் விட பாலா அவரை தோள் கொடுத்து தட்டி தேத்துகிறார். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வர பாலாவின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…
பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…
ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…