மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க 20 ஆண்டுகளாக நீந்தியே செல்லும் ஆசிரியர்.. இப்படி ஒரு ரியல் ஹீரோவை பார்த்ததுண்டா..!

Spread the love

சினிமாவில் எத்தனையோ ஹீரோக்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிலரை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி ஒரு ரியல் ஹீரோ குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். கேரளாவின் மாமல்லபுரத்தில் உள்ள படிஞ்சட்டுமுரியிலுள்ள முஸ்லிம் கீழ்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் தான் 42 வயதான அப்துல் மாலிக். 1993 ஆம் ஆண்டு, மாலிக் மாதம் ரூ.1,350 சம்பளத்தில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.  சாலை வழியாக 24 கிலோமீட்டர் நீண்ட பயணத்தை தவிர்ப்பதற்காக இவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய வீட்டிலிருந்தே பள்ளிக்கும் பள்ளியிலிருந்து வீட்டுக்கும் நீர் வழியாக நீந்தி செல்கின்றார்.

 

அப்படி செல்லக்கூடிய இவர் இத்தனை வருடங்களில் ஒரு வகுப்பை கூட தவறவிட்டது இல்லையாம். இவ்வாறு நீந்தி வருவதால் நீண்ட சாலை பயணத்தை தவிர்ப்பதாக கூறப்படுகிறது. மூன்று பேருந்துகள் மாறி செல்ல வேண்டி இருப்பதால் அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது. இதனால் அவர் நீர் வழியாக நீந்தி வருகின்றார். அவர் தன்னுடைய துணிகளையும் புத்தகங்களையும் ஒரு பிளாஸ்டிக் பையில் எடுத்து செல்கின்றார். பிறகு ஆற்றை கடந்ததும் புதிய ஆடைகளை அணிந்து பள்ளிக்கு செல்கிறார்.

அப்துல் ஒரு தீவிர சுற்றுச்சூழல் ஆர்வலரும் கூட. கடந்த ஆண்டுகளில் நதி எவ்வாறு மாசுபட்டுள்ளது என்பதை பார்த்து அவர் வருத்தப்படுகின்றார். தனது தனித்துவமான ஆசிரியரை நேசிக்கும் தனது மாணவர்களை அவர் அடிக்கடி நீச்சல் பழக அழைத்து செல்கிறார். அவர்கள் ஒன்றாக சேர்ந்து ஆற்றின் மேற்பரப்பில் மிதக்கும் பிளாஸ்டிக், குப்பை மற்றும் பிற அசுத்தங்களை அகற்றுகிறார்கள்.

 

இது தொடர்பாக இவர் அளித்த பேட்டியில், நான் முதல் ஆண்டில் சாலை வழியாகத்தான் பயணம் செய்தேன். ஆனால் என்னுடைய சகா ஊழியர்கள் ஆலோசனையின் பேரில் தான் நான் ஆற்றைக் கடக்க ஆரம்பித்தேன். நான் பணியாற்றும் பள்ளி மூன்று பக்கங்களிலும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. எனவே வேறு எந்த வகையான போக்குவரத்தையும் நம்பி இருப்பதைவிட நீந்துவது தான் நல்லது என இந்த முடிவை நான் எடுத்து விட்டேன் என அவர் கூறுகின்றார்.

Nanthini

Recent Posts

“1,000 கோடி சொத்து.. அதிரடி பிரச்சாரம்…” லால்குடியில் திமுக-வை ஆட்டம் காண வைத்த லீமா ரோஸ்… அதிரும் அரசியல் களம்…!!

திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…

10 minutes ago

செங்கோட்டையன் விலகலால் அதிமுக-வுக்கு பாதிப்பா…? கோபியில் இபிஎஸ் கொடுத்த மாஸ் பதிலடி…!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…

20 minutes ago

“என் சாவுக்காக என் பிள்ளையே காத்திருக்கிறான்! … தைலாபுரத்தில் கண்ணீர் விட்டு கதறிய மருத்துவர் ராமதாஸ்…!!!

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…

20 minutes ago

“யாராவது சொன்னா கொன்னுடுவேன்…” 7 வயது சிறுமிக்கு நேர்ந்த நரக வேதனை…. நெஞ்சை உலுக்கும் பின்னணி…!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…

30 minutes ago

“உன்ன பத்தி என்கிட்ட ஆதாரம் இருக்கு, வெளிய விட்டா நாறிப்போகும்”… செங்கோட்டையனை ஊர் சிரிக்க வைத்த இபிஎஸ்…!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி…

40 minutes ago

BREAKING: நடிகர் சித்தார்த் வேணுகோபால் காலமானார்…. கண்ணீரில் திரையுலகம்…!!

பிரபல மலையாள சின்னத்திரை கலைஞர் சித்தார்த் வேணுகோபால் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தினார். கேரள மாநிலம் திருச்சூர்…

48 minutes ago