“நல்லா படிச்சு கார் வாங்கி என்ன கூட்டிட்டு போ”.. சைக்கிளில் உணவு டெலிவரி செய்த இளைஞருக்கு KPY பாலா செய்த உதவி..!

By Nanthini on பங்குனி 17, 2025

Spread the love

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களிடம் வரவேற்பு பெற்றார். வளர்ந்து வரும் நடிகராக சில படங்களில் நடித்திருக்கிறார். சமீப காலமாக கஷ்டப்படும் மக்களுக்கு ஒடியோடி உதவும் இவரது தங்கமான குணத்தை பார்த்து, மக்கள் பாராட்டி வருகின்றனர். முதலில், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள மலைவாழ் கிராம மக்களுக்காக இலவசமான ஆம்புலன்ஸ் வாகனங்களை சொந்த பணத்தில் வாங்கிக் கொடுத்து உதவினார். அடுத்து சென்னையில் கடந்த வருடம் ஏற்பட்ட கனமழையால், வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு தனது சொந்த பணத்தில் இருந்து ரூ. 5 லட்சம் வரை எடுத்து அவர்களுக்கு உதவினார் KPY பாலா.

KPY பாலாவுக்கு ஷாக் கொடுத்த பெண்.. என்ன செய்திருக்கிறார் பாருங்க

   

அதாவது 340 குடும்பங்களுக்கு தலா ரூ. ஆயிரம் கொடுத்து உதவினார். மேலும் பல குடும்பங்களுக்கு பெட்ஷீட், பாய் தலையாணி, நைட்டீ, லுங்கி போன்றவற்றை வாங்கி தந்தார். இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. இதில் எந்த விளம்பரமும் எனக்கு தேவையில்லை என்றும் அவர் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.  சென்னையில் பல்லாவரத்தை அடுத்துள்ள அழகாப்புதூர் பகுதியில் இலவச ஆட்டோ சேவை திட்டத்தை  தொடங்கி வைத்துள்ளார். அந்த ஆட்டோவில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், நோயாிகள், வயதானவர்கள் என வசதியற்ற மக்கள் இலவசமாக பயணிக்கலாம்.

   

எல்லா பணத்தையும் இப்படியே செலவு செஞ்சா.. KPY பாலா திருமணத்தில் வந்த சிக்கல்

 
இப்படி தொடர்ந்து பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து சேவை செய்து வரும் பாலா தினம்தோறும் சைக்கிளில் உணவு டெலிவரி வேலை செய்து வந்த இளைஞர் ஒருவருக்கு இரு சக்கர வாகனம் வாங்கி கொடுத்த சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நீ நல்லா படிச்சு முடிச்சு பெரிய வேலைக்கு போய் கார் வாங்கிட்டு என்ன கூட்டிட்டு போ என்று கூறி அந்த இளைஞரை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளார். தற்போது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வர பாலாவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Balan Akassh Balaiyan Jaganathan பதிவைப் பகிர்ந்துள்ளார் (@bjbala_kpy)