பெண் செய்த செயலால் அதிர்ச்சி அடைந்த KPY பாலா.. புகைப்படத்தை வெளியிட்டு என்ன சொல்லிருக்காருனு பாருங்க..

By Mahalakshmi on ஜனவரி 29, 2024

Spread the love

சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது திறமையால் KPY பாலா விஜய் டிவியில் முன்னணி காமெடியனாக இருந்து வருகிறார்.  இவர் யார் என்ன சொன்னாலும் பதிலுக்கு அட்டடைமில்  காமெடியாக பேசும் திறமை கொண்டவர். 2017 இல் வெளியான கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியிட்டு தனது காமெடி மூலம்  வெற்றி பெற்று ரசிகர்களை குவித்தார்.

   

அதன் பிறகு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் ஈர்க்கப்பட்ட ஷோவாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டை மின்னல் வேகத்தில் முன்னேற செய்தது. இந்த நிகழ்ச்சியில் குக்குகளுக்கு  கோமாளியாக இருந்தவர் பாலா. இந்த ஷோவில் அனைவரையும் கலாய்த்து சிரிக்க செய்து மேலும்  பிரபலம் அடைந்தார்.

   

 

 சமீப காலமாக அவர் விஜய் டிவியில் இருந்து விலகி, தற்போது சினிமா, YouTube சேனல் என அவர் கவனம் செலுத்தி வருகிறார். பாலா  இயக்குனர் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான “ஜூங்கா” திரைப்படத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் பாலா நடித்து வருகிறார்.

தற்போது இவர் தன்னிடம் இருக்கும் பணத்தை ஏழை மக்களுக்கு  உதவி செய்ய ஆரம்பித்துள்ளார். அதாவது ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் அளிப்பது  உள்ளிட்ட பல  நல்ல விஷயங்களை தன்னால் முடிந்த வரை மக்களுக்கு செய்து வருகிறார். அதற்காக பாலாவின் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றார்கள்.

KPY பாலாவுக்கு சமீபத்தில் அவரின் ரசிகர் பெண் ஒருவர் ஷாக் கொடுத்து இருக்கிறார். அதாவது, பாலாவின் பெயரை கையில் பச்சை குத்தி கொண்டிருக்கிறார். மேலும், அவருடன் எடுத்து கொண்ட போட்டோவை பாலா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நான் சமீபத்தில் ஒரு அதிசயப் பெண்ணைப் பார்த்தேன். அவள் கையில் என் பெயரை பச்சை குத்திக் கொண்டாள். நான் இவ்வளவு மதிப்புள்ளவள் அல்ல, என் உணர்ச்சிகளை வார்த்தைகளால் விளக்க முடியாது. லாட்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸின் மரியாதை, நன்றி மற்றும் என் இனிமையான இதயத்தை உங்களுக்கு நேசிக்கவும், முழு உணர்ச்சியை உணருவது மீண்டும் உங்களை நேசிக்கவும் என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார்.