#image_title
ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா 4 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கேபிஒய் பாலா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் கேபிஒய் பாலா. டிவி நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி தற்போது அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் ஒரு நபராக உயர்ந்து நிற்கின்றார்.
அந்த நிகழ்ச்சி மூலமாக பிரபல நகைச்சுவை நடிகராக மாறி இருக்கின்றார் பாலா. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் பல்வேறு பொது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றார். ஒரு சில திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். அது மட்டும் இல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பாலாவின் திறமையை மேலும் மெருகேற்றி உள்ளது.
தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் இவர் வாங்கும் சொர்ப்ப தொகையை மட்டுமே சம்பளமாக வாங்குகின்றார். அதையும் பிறருக்கு உதவி செய்து விடுகின்றார். ஐயாயிரம் சம்பளத்திலேயே பல உதவிகளை செய்து வரும் இவர் தனக்கென எதையும் மிச்சம் வைக்காமல் அனைத்தையும் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலேயே கழித்து வருகின்றார் பாலா.
அதுமட்டுமில்லாமல் ராகவா லாரன்ஸின் மாற்றம் என்ற சேவையில் இணைந்து அதன் மூலமாகவும் ஏகப்பட்ட பேருக்கு உதவி செய்து வருகின்றார். இந்நிலையில் இன்று ஹோட்டல் திறப்பு விழா ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக பாலா கலந்து கொண்டார். அப்போது பத்திரிக்கையாளர்களின் சில கேள்விக்கு அவர் பதில் அளித்து இருந்தார். அதில் காஞ்சனா 4 படத்தில் நீங்கள் ஏதாவது கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த பாலா காஞ்சனா 4 படம் முதல் ஆளாக பார்க்க வேண்டும் என்று கேரக்டரில் நான் இருக்கின்றேன் என கிண்டலாக பதில் கூறினார். மேலும் காஞ்சனா 4 படத்தில் லாரன்ஸ்தான் நடிக்கிறார். நான் நடிப்பதை பற்றி அவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் பாலாவின் உதவி செய்வதை பலரும் விமர்சித்து வரும் வகையில் அதற்கு பதில் அளித்த பாலா இவர் உதவி செய்கிறானா என்ன பாக்காமல் இவன் எல்லாம் உதவி செய்கிறான்.
நாம் யாருக்காவது உதவி செய்வோம் என்று எண்ணினால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார். மேலும் இது போன்ற விஷயங்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தனக்கு வருகிற 100 மெசேஜ்களில் 98 நல்லதாக இருக்கின்றது. அதை மட்டும் நான் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். என்னுடைய எண்ணம் இன்னும் பலருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதுதான் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
தமிழ்நாடு அரசியல் களத்தில் முக்கியத் தலைவர்களில் ஒருவரான இனியன் சம்பத் இன்று காலமானார். 'சொல்லின் செல்வர்' என்று போற்றப்படும் ஈ.வி.கே.…
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பராசக்தி' திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் (CBFC) பல்வேறு நிபந்தனைகளுடன் இன்று U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தில்…
பாஜக நிர்வாகி சரத்குமார், 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தணிக்கைக் குழு (Censor Board) தடை விதித்தது குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில்…
2026 ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள், நகைக் கடன் பெறும் முறையில் முக்கிய…
திண்டுக்கல் மாவட்டம் யாகப்பன்பட்டியில், பழிக்குப்பழியாக கணவன் மற்றும் மனைவி இருவரும் வெவ்வேறு இடங்களில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, ரியல் எஸ்டேட் தொழிலதிபரான குரு பிரசாத் (30) என்பவர் மர்ம நபர்களால் மிகக் கொடூரமாகக்…