#image_title
1960-களிலேயே சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில், முகம் தெரியாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணிக்கு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம்தான் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இருந்து அவரை டிரிகர் செய்யும் கதாபாத்திரத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பார். படத்தில் அவர் சொல்லும் ‘பத்த வச்சிட்டியே பரட்ட்’ வசனம் இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது.
16 வயதினிலே திரைப்படம் பெரிய ஹிட்டானதும் அடுத்தடுத்து அவருக்கு உடனேயே பெரிய வாய்ப்புகள் உருவாகிவிடவில்லை. கிடைத்த கதாபாத்திரங்களில் தலைகாட்டி வந்தார். 80 களுக்கு பிறகே அவர் செந்திலோடு இணைந்து தங்களுக்கென ஒரு ஸ்டைல் காமெடியை உருவாக்கினார்.
கவுண்டமணியின் பாணியைதான் தற்போது சந்தானம் மற்றும் யோகி பாபு ஆகிய இருவருமே ஃபாலோ பண்ணி வருகின்றனர். இடையில் கவுண்டமணி சில ஆண்டுகள் அவரின் உடல் நலக்குறைவு காரணமாக சினிமாவில் இருந்து விலகியிருந்தார். ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்போது அவர் பழனிச்சாமி வாத்தியார் மற்றும் ஒத்த ஓட்டு முத்தையா ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
#image_title
90 களில் கவுண்டமணியை தன்னுடைய படங்களில் மிகச்சிறப்பாகக் கையாண்ட ஒரு இயக்குனர் என்றால் அது சுந்தர் சி என்று தயங்காமல் சொல்லலாம். அவரின் படங்களில் கவுண்டமணி செகண்ட் ஹீரோ போலவே தோன்றுவார். அந்தளவுக்கு அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பார் சுந்தர் சி. ஆனால் சுந்தர் சி முதல் முதலாக ‘முறை மாப்பிள்ளை’ படத்தில் நடிக்க கவுண்டமணியைக் கேட்டபோது அவர் சுந்தர் சி யை நம்பவில்லையாம்.
இது சம்மந்தமாக கவுண்டமணியின் நெருங்கிய நண்பரும் அவருடையக் காமெடி காட்சிகளுக்கு எழுதியவருமான சாய் ராஜகோபால் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “தன்னுடைய முதல் பட கதையை கவுண்டமணியிடம் சொல்ல வந்தபோது அவர் சுந்தர் சி யை முழுமையாக நம்பவில்லை. எப்போதும் புதுப்பட இயக்குனர்கள் கதையில் நடிக்கத் தயங்குவார். என்னைக் கதை கேட்க சொன்னார். நான் சில மாற்றங்களை சொல்லி கதையை திருத்தி ‘நல்ல கதை நடிக்கலாம்’ என சொன்னபிறகுதான் நடித்தார்.” எனக் கூறியுள்ளார்.
பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…
ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…