விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

#
இந்த சீசனில் ஒரு சில போட்டியாளர்கள் சுவாரசியமாக விளையாடி வந்தாலும் இன்னும் சிலர் எதுவும் செய்யாமல் பாதுகாப்பாக கேம் விளையாடி வருவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில் அடுத்ததடுத்த வாரங்களில் ஆர்.ஜே ஆனந்தி மற்றும் சாச்சனா, சத்யா மற்றும் தர்ஷிகா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.

#image_title
இந்நிலையில் இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்த அப்டேட்கள் இணையத்தில் கசிய தொடங்கி இருக்கிறது. இன்னும் வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே இருக்கின்றனர். அதிகபட்சமாக இன்னும் 4 வாரங்கல் இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக இன்னும் சில டபுள் எவிக்ஷன் நடக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ்7 போட்டியாளர் கூல் சுரேஷ் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக அந்த அமைதியை சீர்குலைக்கிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் ராணவ் என்ற பையன் கீழே விழுந்து கையை உடைத்துக் கொண்டார். வேறு ஏதாவது உடைத்திருந்தால் அவர் குடும்பத்துக்கு என்ன ஆகும்? தமிழகத்திற்கு எந்த ஒரு சண்டை சச்சரவும் இல்லாமல் அமைதியாக போய்க்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை வைத்து வீட்டிற்குள் சண்டையை போடவிட்டு பண்ணிட்டு போறீங்க. இது மிகப்பெரிய தவறு. தமிழக அரசு தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன் பிக்பாஸ் நிகழ்ச்சி தடை செய்ய அடுத்த பிக் பாஸ் 9 வரவே கூடாது. அங்கே போனால் தான் அது ஜெயிலா என்னவென்று தெரிகிறது. அங்கு பல விஷயங்கள் நடக்கிறது என்று கூறியுள்ளார்.
