தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளாக நடித்துவரும் நடிகை வடிவுக்கரசிக்கு விழா ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையதில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் சிறு வயது முதலே நடித்து பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் வடிவுக்கரசி. 1955 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது 69 வயது ஆகின்றது. தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளையும் கடந்து பயணித்து வருகின்றார்.
தமிழ் சினிமாவில் 1978 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் நடிப்பில் வெளிவந்த சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அறிமுகமானார் வடிவுக்கரசி. அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
அது மட்டும் இல்லாமல் நடிகர் விஜய், அஜித் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடன் இணைந்து இவர் படங்களில் நடித்துள்ளார். பின்னர் திருமணம் செய்து கொண்டு குழந்தை என்று செட்டிலான இவர் சிறிது கேப் எடுத்துக் கொண்டார்.
பின்னர் மீண்டும் சின்னத்திரையில் நாடகங்களில் நடிக்க தொடங்கினர். 1999 ஆம் ஆண்டு முதல் சின்னத்திரையில் பயணித்து வரும் இவர் மிக மூத்த நடிகைகளில் ஒருவர். இந்நிலையில் இவரின் திரையுலக பயணத்தை கொண்டாடும் வகையில் சின்னத்திரையை சேர்ந்த பல பிரபலங்கள் சேர்ந்து அவருக்கு விழா ஒன்றை நடத்தி இருந்தார்கள்.
அதில் பல முன்னணி சீரியல் நடிகர், நடிகைகள் என பங்கேற்று அவரிடம் ஆசி பெற்றிருந்தார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.