கொளத்தூரில் ஸ்டாலினுக்கு பேரதிர்ச்சி… வாக்குப்பதிவு இயந்திர ஆய்வில் வெளியான இறுதி முடிவு…. ஆடிப்போன அறிவாலயம்….!

By Nanthini on ஆவணி 7, 2026

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ்.பாபு சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 14 வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சீல்கள் சரியாக இல்லை என்றும், சில இயந்திரங்களில் புதிய டேக்குகள் ஒட்டப்பட்டிருந்ததாகவும் திமுக சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக மறுஆய்வு நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

திமுகவின் புகாரைத் தொடர்ந்து, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சரிபார்க்கும் பணி தொடங்கியது. மொத்தம் 8 நாட்கள் நடைபெற்ற இந்த ஆய்வில், திமுக, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் முகவர்கள் கலந்துகொண்டனர். பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த முதன்மை பொறியாளர் மற்றும் இரு உதவிப் பொறியாளர்கள் தலைமையில், சந்தேகத்திற்குரியதாகக் குறிப்பிடப்பட்ட 14 வாக்குப்பதிவு இயந்திரங்களும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

   

இந்தச் சோதனையின் போது வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, வி.வி.பேட் சீட்டுகளும் சரிபார்க்கப்பட்டன. ஆய்வின் முடிவில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்தவிதமான தொழில்நுட்பக் கோளாறோ அல்லது வாக்கு எண்ணிக்கையில் முரண்பாடோ இல்லை என்பதும், அனைத்து இயந்திரங்களும் சரியாகச் செயல்பட்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டது. மேலும், ஆய்வின் போது வேட்பாளர்களின் பிரதிநிதிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு பொறியாளர்களால் உடனுக்குடன் விளக்கமளிக்கப்பட்டது.

   

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி முழுமையாக நிறைவடைந்துவிட்டதாகவும், அதில் எந்த சிக்கலும் கண்டறியப்படவில்லை என்றும் சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சமீரன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், 14 வாக்குச்சாவடி இயந்திரங்களும் விதிகளுக்கு உட்பட்டுத் துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டு, எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.