சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் தனசேகரன், விசாரணை என்ற பெயரில் இளம்பெண் ஒருவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூரைச் சேர்ந்த ஜமீலா என்ற பெண்ணின் உறவினரான நூர் முகமது என்பவரின் நகை காணாமல் போனது தொடர்பாக, நகையின் உரிமையாளர்கள் ஜமீலா மீது சந்தேகம் இருப்பதாகப் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் தனசேகரன் ஜமீலாவிடம் முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, நேற்று மீண்டும் விசாரணை நடத்துவதற்காக நூர் முகமதுவின் பெரியம்மா வீட்டிற்குச் சென்ற தனசேகரன், அங்கு வீட்டில் இருந்த பெரியம்மா, பெரியப்பா மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரையும் கட்டாயப்படுத்தி வெளியே அனுப்பியுள்ளார். பின்னர், ஜமீலாவிடம் தனிமையில் விசாரணை நடத்துவதாகக் கூறி, “நான் க்ரைம் எஸ்.ஐ, உண்மையைச் சொல்ல வேண்டும்” எனக் மிரட்டியுள்ளார். மேலும், ஜமீலாவின் கையைப் பிடித்து “உன் கை வேர்க்கவில்லை, நீ பதட்டமாக இல்லை” என்று கூறியதுடன், “உன் உதடு உண்மையை பேசவில்லை” எனக் கூறி அவரது உதட்டைத் தொட்டு அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.
மேலும், ஜமீலா அணிந்திருந்த புர்கா உடையுடன் அவரைப் புகைப்படம் எடுத்த உதவி ஆய்வாளர், “புர்காவை கழற்ற வேண்டும்” எனக் கூறி மீண்டும் புகைப்படம் எடுத்து, அது தன்னிடம் மட்டுமே இருக்கும் என மிரட்டியுள்ளார். தொடர்ந்து, நெஞ்சில் கை வைத்து உண்மை பேச வேண்டும் என்று கூறி அநாகரீகமாக நடந்துகொண்டதுடன், ஜமீலாவுக்கு முத்தம் கொடுக்க முயன்றதாகவும், தன்னை முத்தமிடுமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜமீலா கூச்சலிடவே, தனசேகரன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதை அடுத்து, உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…
2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்பட்டு எஞ்சிய வேட்டி மற்றும் சேலைகளை, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு முதியோர் ஓய்வூதியத்…
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 'நியோ மேக்ஸ்' நிதி நிறுவன மோசடி வழக்கின் தொடர்ச்சியாக, அதன் முன்னாள் பங்குதாரர் கடத்தப்பட்ட…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், அதிமுகவில் இருந்து மேலும் 7 சட்டமன்ற…
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள தேசர் தாலுக்கா கிராமம் ஒன்றில், பெற்ற தந்தையே தனது 13 வயது மகளைப் பாலியல்…
ஆன்லைன் கடன் செயலிகளின் பேராசைக்கும், டிஜிட்டல் மிரட்டல்களுக்கும் மற்றுமொரு இளம் உயிர் பலியாகியிருக்கும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்…