பழங்குடியின பெண் To ஜனாதிபதி… தன் வாழ்க்கையில் திரௌபதி முர்மு கடந்து வந்த கசப்பான பாதைகள்..!

By Nanthini on ஆனி 23, 2025

Spread the love

பொதுவாகவே நாட்டின் உயரிய பதவிகளில் மற்றும் பொறுப்புகளில் இருக்கக்கூடிய பெண்களின் எண்ணிக்கை என்பது குறைவு தான். நாட்டின் முதல் குடிமகனாக கருதப்படும் குடியரசு தலைவர் பதவியில் இதுவரை இருந்த 14 பேரில் ஒருவர் மட்டும்தான் பெண். அவர் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை குடியரசு தலைவராக பதவி வகித்த பிரதீபா பாட்டில். அவருக்கு பிறகு சுமார் பத்து ஆண்டுகள் கழித்து குடியரசு தலைவர் பதவிக்கு பெண் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தான் 64 வயதான திரௌபதி முர்மு. கடந்த 2022 ஆம் ஆண்டு நாட்டின் 15 வது குடியரசு தலைவராக இவர் தேர்வு செய்யப்பட்டார்.

திரௌபதி முர்மு யார்? பாஜக ஜனாதிபதி வேட்பாளர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள  வேண்டிய அனைத்தும்

   

இன்று குடியரசு தலைவர் என்ற உயர்ந்த பதவியில் இருக்கும் திரௌபதி முர்மு கடந்து வந்த பாதைகள் அனைத்தும் கடினமானவை தான். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கடினமான சூழ்நிலையில் வளர்ந்து படித்து ஆசிரியராக வேலை பார்த்து அதன் பிறகு அரசியலில் நுழைந்து அதில் ஒவ்வொரு படியாக முன்னேறி என்ற நாட்டின் முதல் குடிமகனாகும் அளவிற்கு அவர் உயர்ந்துள்ளார். ஒடிசாவில் உள்ள ஒரு சிறிய பழங்குடி கிராமத்தில் பிறந்தவர் தான் திரௌபதி முர்மு. சந்தால் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர் புவனேஸ்வரில் உள்ள ரமாதேவி மகளிர் கல்லூரியில் படித்தார்.

   

Presidential Candidate Draupadi Murmu College Days Special Photo Goes Viral  - Sakshi

 

இவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் மற்றும் சமூகப் பணியில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார். பட்டப் படிப்பை முடித்த பிறகு ஆசிரியராக பணியாற்றிய இவ்வாறு அதன்பிறகு அரசு ஊழியராக நீர்வளம் மற்றும் மின்சாரத் துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தார். அதன் பிறகு ஒரு சாதாரண கவுன்சிலராக தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கிய இவர் இரண்டு முறை ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

Draupadi Murmu Ma'am Ate at Stalls, Travelled Sans Security': Assam BJP  Worker Recounts 2006 Meet | Politics News - News18

பாஜகவை சேர்ந்த இவர் கடந்த 2000 ஆம் ஆண்டில் ஒடிசாவில் பாஜக, ஜனாத தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது அமைச்சராக பதவி வகித்தார். ஒடிசாவின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராகவும் பிறகு நீர்வளம் மற்றும் விலங்குகள் நல மேம்பாட்டு துறை அமைச்சராகவும் இவர் பதவி வகித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதன் மூலமாக ஒடிசாவில் இருந்த ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் முதல் பழங்குடியின ஆளுநர் என்ற பெருமையை இவர் பெற்றார். மேலும் ஒடிசாவின் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது 58 போக்குவரத்து அலுவலகங்களை அமைத்த பெருமைக்குரியவர். அரசியல் பயணம் நல்லபடியாக தொடங்கி சென்ற நிலையில் இவர் பல தடைகளையும் எதிர்கொண்டார்.

திரௌபதி முர்முவுக்கு முன், அவர்கள் பதவியேற்கும் போது, ​​இந்தியாவின்  குடியரசுத் தலைவர்களின் வயது எவ்வளவு | இன்போகிராபிக் - இந்தியா டுடே

குடும்ப வாழ்க்கையிலும் பெரும் இழப்பை சந்தித்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு அவரது மூத்த மகன் லக்ஷ்மன் உயிரிழந்தார். 2013 ஆம் ஆண்டு இரண்டாவது மகன் உயிரிழந்தார். பிறகு 2014 ஆம் ஆண்டு அவரது கணவர் ஷியாம் சரண் உயிரிழந்தார். தொடர்ந்து மூவரின் இழப்பு இவரை துயரத்தில் ஆழ்த்தியது. பிறகு எப்படியாவது இந்த சமூகத்தில் சாதிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து துயரங்களையும் தூக்கி எறிந்து விட்டு இன்று நாட்டின் குடியரசு தலைவராக பதவி வகிக்கும் முதல் பழங்குடியின பெண் என்ற பெருமையை ஏற்ற அனைவரும் வியக்கும் அளவிற்கு உயர்ந்த பதவியில் உள்ளார்.