FLASH NEWS: டிட்வா புயலுக்கு தமிழகத்தில் 3 பேர் பலி…. அதிர்ச்சி தகவல்…..!

By Nanthini on கார்த்திகை 30, 2025

Spread the love

டிட்வா புயலால் தமிழகத்தில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் உறுதிப்படுத்தி உள்ளார். புயலால் பாதிக்கப்பட்டவர்கள் 2,393 பேர் 38 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் இலங்கையில் உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். காவிரி படுகை மாவட்டங்களில் சுமார் 56 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

மழை நின்ற பிறகு பயிர் பாதிப்பு குறித்து முழுமையாக கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.  டிட்வா புயலுக்கு 149 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. கனமழை மற்றும் சூறைக்காற்றுக்கு 234 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. டிட்வா புயல் இன்று மாலைக்குள் வலுவிழக்கும் என்றாலும் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.