தமிழ் சினிமாவில் டார்லிங் என்ற பேய் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர்தான் ஜிவி பிரகாஷ். முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு அவர் நடித்த பல படங்கள் அடி வாங்கின. சில படங்களில் அவருடைய நடிப்பு பேசப்பட்டது. இறுதியாக திவ்யபாரதியுடன் இணைந்து பேச்சுலர் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படத்தை இளைஞர்கள் அனைவரும் கொண்டாடினார்கள். இந்நிலையில் மீண்டும் திவ்யபாரதியுடன் இணைந்து ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் தான் கிங்ஸ்டன். இந்த திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்தப் படமாவது அவருக்கு கை கொடுத்ததா இல்லையா என்பது குறித்த ட்விட்டர் விமர்சனம் பற்றி பார்க்கலாம்.
விஜய் ஆண்டனி மற்றும் ஹிப் ஹாப் ஆதி வரிசையில் ஜிவி பிரகாசும் இசையமைப்பாளராகவும் ஹீரோவாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர்களைப் போலவே இவருக்கும் தொடர்ந்து படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வரிசையாக வெளியான ரிபெல், கள்வன், டியர் ஆகிய திரைப்படங்கள் தோல்வியை தழுவியது. இன்று இவருடைய நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் கிங்ஸ்டன். இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு சிறப்பாக உள்ளது. முதல் பாதி முழுவதும் கதையை செட் செய்ய இரண்டாம் பாதியில் கடல் பேய்களை காட்டி இயக்குனர் கதற விட்டுள்ளார்.
படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இருவரும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஹாலிவுட் தரத்தில் ஒரு தரமான பேய் படமாக இந்த படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் கொடுத்துள்ளார். புதுவிதமான இந்த முயற்சி நிச்சயம் ரசிகர்களை திரையரங்குகளில் அசரவைக்கும் என்பது உறுதி. படத்தின் முதல் பாதி முழுவதும் எமோஷனலாகவும் இரண்டாம் பாதியில் இருந்து ஹாரர் படமாகவும் பிரித்துக் கொடுத்துள்ள விதம் அருமையாக உள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த படத்தில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் தன்னுடைய ஒட்டுமொத்த உழைப்பையும் சிறப்பாக கொடுத்துள்ளார்.
அதிலும் கடலுக்கு நான் கிங்குடா என்று வரும் வசனம் பட்டையை கிளப்புகிறது. அனைவரும் இப்படி ஒரு பேய் படத்தை கட்டாயம் திரையரங்குகளில் பார்க்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆக மொத்தத்தில் ஜிவி பிரகாஷ் கிங்ஸ்டன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் வகையில் சிறப்பான ஒரு படமாக அமைந்துள்ளது.
ஹல்தவானி கம்லுவாகஞ்சா சாலையில் கடந்த செப்டம்பர் 14 அன்று மாலையில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. செவிலியர் பயிற்சி மாணவியான…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…