“யானை மாதிரி இருந்தேன்…” 98 கிலோவிலிருந்து ஸ்லிம் ஆன குஷ்பு…! அவரே சொன்ன ஃபிட்னஸ் சீக்ரெட்…!!

Spread the love

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான குஷ்பு, தான் 98 கிலோ எடையிலிருந்து மிகவும் ஸ்லிம்மாக மாறியதற்கான ரகசியத்தைப் பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பின் போது உடல் எடை அதிகரிப்பால் முட்டி வலி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற சிரமங்களை எதிர்கொண்டதாகவும், அந்த சமயத்தில் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தால் கூட பயமாக இருந்ததாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில், கொரோனா காலத்திலிருந்து தீவிர முயற்சியில் இறங்கிய அவர், கடந்த நான்கு ஆண்டுகளாகக் கடுமையான உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடித்துள்ளார்.

குறிப்பாக, மைதா மற்றும் சப்பாத்தி போன்ற உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவு முறைகளைப் பின்பற்றியதன் மூலம் தனது எடையைக் குறைத்துள்ளதாகக் கூறியுள்ளார். தற்போது 55 வயதிலும் தனக்கு நீரிழிவு அல்லது இரத்த அழுத்தம் போன்ற எந்தப் பாதிப்புகளும் இல்லை என அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார். சினிமாவில் அறிமுகமானபோது எப்படி ஒல்லியாக இருந்தாரோ, அதேபோல் இப்போது ஆரோக்கியமான ஸ்லிம் தோற்றத்தைப் பெற்றுள்ளதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

7 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

7 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

7 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

7 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

7 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

7 மணத்தியாலங்கள் ago