தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக உள்ளது. அதாவது திமுக, அதிமுக, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. இதில் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக எப்படியும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் சீமான் யாருடனும் கூட்டணி வைக்காமல் தன்னந்தனி ஆளாக கட்சியை வழிநடத்தி வருகிறார். அதேசமயம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் அதிமுக ஆட்சியை நிலை நாட்டுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார்.
இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இறங்கி உள்ளதால் விஜயை தங்கள் கூட்டணியில் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே சமீபத்தில் அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்ததால் தற்போது விஜய் டிவி மேலும் பலம் கூடியுள்ளது. இதனால் திமுகவுக்கு போட்டியாக விஜய் தான் தற்போது களத்தில் உள்ளார்.
இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி பேச்சு வார்த்தையை தமிழக வெற்றி கழகம் தீவிரப்படுத்தியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் அமமுக மற்றும் புதிய தமிழகம் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் தேமுதிக, பாமக (அன்புமணி தரப்பு) கட்சிகளுடனும் ரகசிய பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாம். விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் விஜய் தலைமையை ஏற்கும் கட்சியுடன் தமிழக வெற்றிக்கலகம் கூட்டணி அமைக்க உள்ளது. இதனால் கூட்டணி குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…