தமிழகத்தில் நாளுக்கு நாள் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தேர்தல் களமும் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தது பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதிமுகவில் இருந்த நீக்கப்பட்ட செங்கோட்டயன் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று அனைவரும் காத்திருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அவர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தார். அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கட்சியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் பலர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைவார்கள் என்று செங்கோட்டையன் கூறியதுதான் அரசியலில் இன்றைய ஹாட் டாபிக்காக உள்ளது. ஏற்கனவே இபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பவர்களிடமும் தன்னுடன் நட்பாக இருந்தவர்களிடமும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைவது குறித்து செங்கோட்டையன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன், தம்பிதுரை உள்ளிட்ட முக்கிய தலைவர்களிடம் செங்கோட்டையன் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஏறத்தாழ முக்கிய தலைவர்கள் பலரும் விஜய் கட்சியில் இணைய உள்ளது உறுதியாகி உள்ள நிலையில் இதை இபிஎஸ்க்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
