பாஜக-வுக்கு அடுத்த பிக்பாஷ் அதிர்ச்சி!.. அண்ணாமலைக்காக கட்சியை விட்டு வெளியேறிய முக்கிய தலைவர்.. அடுத்தடுத்து சரியும் விக்கெட்டுகள்.. கலக்கத்தில் தாமரை கூடாரம்..!!

By Muthu Mani on ஆனி 10, 2026

Spread the love

தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு அண்ணாமலை பா.ஜ.க.வில் இருந்து விலகி, “வி தி லீடர்ஸ்” என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கினார். இந்த இயக்கத்தில் குறுகிய காலத்திலேயே 17 லட்சத்துக்கும் அதிகமானோர் இணைந்துள்ள நிலையில், தமிழக பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் இதில் தொடர்ந்து தங்களை இணைத்து வருகின்றனர். அந்த வகையில், அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரும் பா.ஜ.க. மாநிலச் செயலாளருமான அமர் பிரசாத் ரெட்டி, தற்போது பா.ஜ.க.வில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தான் பிறப்பால் தெலுங்கர் என்றாலும், தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் தொடர்ந்து பாடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணையவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்தின் எதிர்கால அரசியல் போட்டி என்பது அண்ணாமலைக்கும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கும் இடையில் மட்டும்தான் இருக்கும் என்றும் அதிரடியாகப் பதிவிட்டுள்ளார்.