தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் பிரம்மாண்ட பரப்புரை மற்றும் பொதுக்கூட்டம் நாளை அன்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் பிற கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் தவெகவில் இணைவார்களா என்ற கேள்விக்கு, அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், இதற்கான விடை நாளைய கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரியும் என்று பதிலளித்துள்ளார்.
இன்று காலையில் அமமுக நிர்வாகி ஒருவர் தவெகவில் இணைந்துள்ளார். ஏற்கனவே கடந்த நவம்பர் இறுதியில், அதிமுகவின் மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது கொங்கு மண்டல அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
