கலிகாலம்..! மதுகுடிக்க பணம் இல்லாததால் 2 மாத ஆண் குழந்தையை விற்ற தாய்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

By Soundarya on மார்கழி 17, 2025

Spread the love

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம்,  எல்லம்மா குட்டா பகுதியைச் சேர்ந்த பி. லெட்சுமி என்ற பெண், தனது 2 மாத ஆண் குழந்தையை ரூ.2.4 லட்சத்திற்கு விற்றுள்ளார். இதுகுறித்த விசாரணையில் லெட்சுமி மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், மது குடிக்கப் பணம் இல்லாததால் குழந்தையை விற்கும் முடிவை எடுத்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாகக் குழந்தையின் தாய் லெட்சுமி, திருமணத் தரகு நிறுவனத்தைச் சேர்ந்த ரமாதேவி, மஞ்சுளா மற்றும் குழந்தையை வாங்கிய புனேவைச் சேர்ந்த விஷால் ஆகிய 4 பேரை நிஜாமாபாத் போலீசார் கைது செய்துள்ளனர். லெட்சுமியின் கணவர் ஸ்ரீனிவாஸ் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், குழந்தையைப் பத்திரமாக மீட்டு மீண்டும் இயற்கை பாதுகாவலரான தாயிடமே (குழந்தைக்கு 5 வயதிற்கு மேல் ஆகாததால்) ஒப்படைத்துள்ளனர்