விக்னேஷ் சிவனை டார்ச்சர் செய்த சிம்பு… நான் செய்த அட்வைஸால்தான் தப்பித்தார் – கெட்டவன் பட இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

By vinoth on புரட்டாதி 13, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இருக்கும் திறமை மிகு நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். தன்னுடைய ஒரு வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் அவரிடம் இருக்கும் சில பிரச்சனைகள் காரணமாக அவர் தொடர்ச்சியாக படங்களில் நடிக்காமல் சிக்கல்களை உருவாக்கிக் கொள்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்புவின் மீது பல புகார்கள் எழுந்தன. அவர் சரியாக படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார் எனவும் டப்பிங்கிற்கு கூட வர மறுக்கிறார் எனவும் தயாரிப்பாளர்கள் கூறி வந்தனர். குறிப்பாக அவரை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தைத் தயாரித்த மைக்கேல் ராயப்பன் சிம்புவின் குற்றச்சாட்டு வைத்து  அவருக்கு ரெட் கார்ட் போடும் அளவுக்கு சென்றது. இன்னும் அந்த பிரச்சனை ஓய்ந்த பாடில்லை.

   

இந்நிலையில் சிம்புவை வைத்து கெட்டவன் என்ற படத்தை இயக்க இருந்த ஜி டி நந்து அந்த படம் கிடப்பில் போடப்பட்டதால் சிம்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். அந்த படம் அவர் கைவிட்டுப் போனதால் அவரால் இன்றுவரை இயக்குனர் ஆகமுடியவில்லை.

   

இந்நிலையில் தனக்கு நடந்தது போலவே விக்னேஷ் சிவனுக்கும் சிம்புவினால் பல தொல்லைகள் தரப்பட்டன என அவர் கூறியுள்ளார். அதில் “போடா போடி படம் ஆரம்பித்து பாதி முடிந்த போதே பட்ஜெட் அதிகமாகிவிட்டது. விக்னேஷ் சிவனுக்கு படம் எடுக்கத் தெரியவில்லை என சிம்பு தரப்பில் இருந்து டார்ச்சர் செய்ய ஆரம்பித்தனர். அதனால் படத்தை விட்டே விலகிவிட போவதாக அவர் என்னிடம் சொன்னார்.

 

நான்தான் அவரிடம் அப்படியெல்லாம் செய்யாதே. எப்படியாவது படத்தை முடித்துவிடு. இல்லையென்றால் உன்னால் அதன் பிறகு இயக்குனரே ஆகமுடியாது எனக் கூறினேன். அதன் பின்னர் போலீஸாக இருந்த விக்னேஷ் சிவனின் அம்மா சிம்புவிடம் பேசி அவருக்கு அட்வைஸ் செய்து மீதிப் படத்தை எடுத்து முடிக்க வைத்தார்.” எனக் கூறியுள்ளார்.