சீரியல் நடிகை கண்மணி – அஸ்வத் திருமணம்.. வெளியான ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்கள்..!!

By Nanthini on புரட்டாதி 13, 2024

Spread the love

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்த பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

   

இந்த சீரியலில் முதன்மை கேரக்டரான கண்ணம்மாவின் தங்கை அஞ்சலி என்ற கேரக்டரில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் கண்மணி மனோகரன் . இவரது கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது.

   

 

இந்த சீரியலுக்குப் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்தார். இதில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து இவருக்கு வெள்ளி திரையில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் இவருக்கும் சன் தொலைக்காட்சியின் நடிகரும் தொகுப்பாளருமான அஸ்வத் என்பவருக்கும் நிச்சயதார்த்தம்  கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. சன் டிவியின் மிஸ்டர் மனைவி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் அஸ்வத், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், சீரியல் நடிகராகவும் வலம் வருகிறார்.

இதில் காலை வணக்கம் மற்றும் ரஞ்சிதமே நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது.  இதனை தொடர்ந்து கண்மணி – அஸ்வத் திருமண கொண்டாட்டம் தற்போது தொடங்கி இருக்கிறது. கொண்டாட்டத்தின் தொடக்கமாக ஹல்தி விழா நடைபெற்று இருக்கிறது.

அதன் புகைப்படங்களை தற்போது கண்மணி வெளியிட்டு நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.