“கல்யாணத்தை விட உயிர் முக்கியம்!”… பட்டுப்புடவையில் ஓடோடி வந்த மணப்பெண்… திருமண மண்டபத்தில் திடீர் பரபரப்பு…!!

By Gayathri on ஆவணி 23, 2026

Spread the love

கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் அனைவரையும் நெகிழ வைக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. திருமண கொண்டாட்டங்களுக்கு மத்தியில், மணப்பெண் ஒருவர் தனது திருமண சடங்குகளைச் சிறிது நேரம் நிறுத்திவிட்டு எதிர்பாராத விதமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார். மருத்துவரான அந்த மணப்பெண், தனது மருத்துவ அறத்தை எந்த சூழ்நிலையிலும் மறக்காமல் செயல்பட்ட விதம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

அந்தத் திருமணத்தில் உணவு பரிமாறும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஊழியர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஒருவருக்கு மூக்கில் ரத்தம் வடியத் தொடங்கிய நிலையில், மற்றொருவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை அறிந்த மணப்பெண், தான் அணிந்திருந்த கனமான திருமண ஆடைகள் மற்றும் அலங்காரத்தைப் பற்றிக் கூட சற்றும் கவலைப்படாமல், உடனடியாக அங்கு விரைந்து சென்று அவர்களுக்குத் தேவையான முதலுதவி சிகிச்சையை அளித்தார்.

   

மணப்பெண் தனது திருமணக் கோலத்திலேயே அந்த ஊழியர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் காணொளி தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. “ஒருமுறை மருத்துவரானால், அவர் என்றென்றைக்கும் மருத்துவர்தான்” என்ற வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில், தனது வாழ்வின் மிக முக்கியமான மகிழ்ச்சியான நாளிலும் மனிதநேயத்தோடு செயல்பட்ட அந்த இளம் மருத்துவரை நெட்டிசன்கள் பலரும் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.