விஜய்யைத் தொடர்ந்து அரசியலில் தனுஷ்?…. டெல்லிக்குச் சென்ற டீம்… கசிந்த 5 கெத்து பெயர்கள்…. தமிழக அரசியலில் பரபரப்பு….!

By Nanthini on ஆவணி 23, 2026

Spread the love

திரைப்பட நடிகர் தனுஷ் அரசியலில் நேரடியாகக் களம் இறங்குவது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடாதபோதிலும், அவரைச் சுற்றி புதிய அரசியல் ஊகங்கள் தீயாகப் பரவி வருகின்றன. தனுஷ் தரப்பில் புதிய கட்சி தொடங்குவதற்காக சுமார் 5 பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான முதற்கட்டப் பணிகளுக்காக அவருடைய வழக்கறிஞர்கள் குழு இந்தியத் தேர்தல் ஆணையத்தை (ECI) அணுகி ஆலோசனை பெற டெல்லி சென்றுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் ‘தமிழர் எழுச்சிக் கழகம்’ என்ற பெயரில் அவர் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகத் தனுஷ் தரப்பிலிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது மறுப்போ இதுவரை வெளியாகாமல் மௌனம் காக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.