CINEMA
நடிப்புக்கு வர காசு பத்தாதுன்னு பெரிய லாபம் பார்க்க ஸ்கெட்ச் போட்ட கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் போட்டோஸ்..!!
முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் ஒரு சில மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தனது பயணத்தை ஆரம்பித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த படம் வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இந்த படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. தனுஷ்க்கு ஜோடியாக தொடரி, விஜய்க்கு ஜோடியாக பைரவா, சூர்யாவுக்கு ஜோடியாக தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் கீர்த்தி சுரேஷ் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா திரைப்படம் ரிலீஸ் ஆனது.
நடிப்பை தாண்டி கீர்த்தி சுரேஷ் பிசினசிலும் களமிறங்கி விட்டார். பொதுவாக கிரிக்கெட் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்தியாவின் முக்கிய நகரங்களில் கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்ட கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்த அணிகளின் உரிமையாளர்களாக பிரபல நடிகர்களும், தொழில் அதிபர்களும் இருக்கின்றனர். கேரள மாநிலத்தில் ஆறு நகரங்களின் பெயர்களில் கிரிக்கெட் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் கேரள கிரிக்கெட் லீக் நடைபெற உள்ளது. இந்த போட்டியின் விளம்பர தூதராக நடிகர் மோகன்லால் செயல்படுகிறார். இந்த நிலையில் பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் திருவனந்தபுரம் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளராக இணைந்து இருக்கிறார். நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இந்த அணியின் மற்றொரு இணை உரிமையாளராக இருக்கிறார். ஏற்கனவே கேரள பெண்கள் கிரிக்கெட் அணிக்கான விளம்பர தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.