NEWS
ரூ.1000 முதலீடு.. ஒவ்வொரு மாதமும் பணம் வீடு தேடி வரும்.. போஸ்ட் ஆபீஸின் வேற லெவல் திட்டம்..!!
தபால் நிலையங்களில் பலரும் சிறு சேமிப்பு திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்து வருகின்றன. மக்களுக்காக தபால் அலுவலகங்களில் பல சிறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் மாத வருமான திட்டம். இது எந்த ஒரு ஆபத்தும் இல்லாத முதலீட்டு திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். அடுத்து ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு ஒரு நிலையான தொகை வருமானமாக வந்து கொண்டே இருக்கும்.
இந்த திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் அரசால் நிர்ணயிக்கப்படுகிறது. தபால் அலுவலகத்தால் நடத்தப்படும் இந்த திட்டத்தில் இந்திய குடிமக்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும். தற்போது இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பித்த பயன்படலாம்.
மேலும் இந்த திட்டம் பாதுகாப்பான மற்றும் உத்திரவாதமான வருமானத்தை எதிர்பார்க்கும் மக்களுக்காக அரசியல் தொடங்கப்பட்ட திட்டமாகும். ஏனென்றால் இந்த திட்டம் இந்திய அரசால் நடத்தப்பட்டு வருகின்றது. நீங்கள் இந்த போஸ்ட் ஆபீஸ் மாத வருமானத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்பினால் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதலீட்டில் நீங்கள் தொடங்கலாம். அது மட்டுமல்லாமல் ஒரே கணக்கில் ஒன்பது லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து கொள்ள முடியும்.
அதுவே நீங்கள் கூட்டுக்கணக்காக வைத்திருந்தால் அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் நீங்கள் ஒரே கணக்கில் ஒன்பது லட்சத்தை டெபாசிட் செய்தால் இந்த வைப்புத் தொகைக்கு 7.4 சதவீத வட்டி வழங்கப்படும். இதனால் ஒரு வருடத்தில் 66 ஆயிரத்து 600 ரூபாய் திரும்ப பெற முடியும். அதனைப் போலவே ஐந்து ஆண்டுகளில் உங்களுடைய மொத்த வருமானம் 3 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயாக இருக்கும். நீங்கள் கூட்டு கணக்கு தொடங்கினால் இதில் 15 லட்சம் டெபாசிட் செய்யலாம்.