நான் மட்டும் நடிக்க வராவிட்டால் அதுதான் ஆகியிருப்பேன்.. அஜித் போலவே கீர்த்தி பாண்டியன்… ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!!

By Soundarya on ஆனி 15, 2025

Spread the love

நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை சமீபத்தில் அசோக் செல்வன் மணம் முடித்தார். கீர்த்தி பாண்டியன் 2019 ஆம் ஆண்டு தும்பா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிலையில் அதனைத் தொடர்ந்து அன்பிற்கினியால் படத்தில் நடித்து அடுத்ததாக கண்ணகி மற்றும் ப்ளூ ஸ்டார் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்த போது அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இடையே காதல் மலர்ந்த நிலையில் இவர்கள் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடத்துவரும் கீர்த்தி பாண்டியன் இப்போது அஃகேனம் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இதில் அவரோடு அருண்பாண்டியன், ரமேஷ், ஜி எம் சுந்தர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய கீர்த்தி பாண்டியன், இந்த படத்தை பெண்களை மையப்படுத்திய படம் என்று வகைப்படுத்த வேண்டாம். படத்தில் உள்ள கேரக்டர்கள் சில விஷயங்களை செய்யும். இந்த படத்தில் இந்திரா எனும் கதாபாத்திரத்தில் கேப் ஓட்டும் டிரைவராக நடித்துள்ளேன். எனக்கு டிரைவிங் என்றால் அவ்வளவு பிடிக்கும். நான் நடிக்க வந்திருக்காவிட்டால் கண்டிப்பாக கார் ரேஸர் ஆகியிருப்பேன்.   எனக்கு எப்போதுமே ஆதரவு கொடுத்துகொண்டு இருக்கும் என்னுடைய தந்தை தான் எனக்கு ஹீரோ” என்று கூறியுள்ளார்.