என்னை அப்படி டிரஸ் போட சொல்லி.. அஜித் பட இயக்குனர் மீது குற்றம் சாட்டிய கயல் ஆனந்தி..

By Deepika on பங்குனி 21, 2024

Spread the love

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நடித்தபோது நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார் நடிகை கயல் ஆனந்தி.

Anandhi in kayal

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிரதானமாக நடித்து வருகிறார் நடிகை கயல் ஆனந்தி. 2014இல் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான பொறியாளர் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். எனினும் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் அதே ஆண்டு வெளியான கயல் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை தேடி கொடுத்தது. அந்த வகையில் தனது பெயரை கயல் ஆனந்தி என மாற்றிக் கொண்டார்.

   
   

GV Prakash and anandhi in trisha illana nayanthara

 

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த இவர் 2015ல் சண்டிவீரன் என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு தனி கவனத்தை பெற்றது. 2015ல் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ரொமான்டிக் காமெடி திரைப்படமாக வெளியான திரைப்படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடிகை கயல் ஆனந்தி நடித்திருப்பார்.

Anandhi in trisha illana nayanthara

இந்தப்படத்தில் நடித்ததன் மூலம் பெரும் கேலி கிண்டல்களுக்கு உள்ளானார் ஆனந்தி. இந்தநிலையில் சமீபத்தில் இந்தப்படம் குறித்து ஒரு உண்மையை சொன்னார், அவர் கூறியுள்ளதாவது, த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை தேர்ந்தெடுத்தது தவறான முடிவு. த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் வரும்போது நான் சினிமாவிற்கு புதிது. இந்த படம் என்ன கருப்பொருளை பேசப்போகிறது, படம் எப்படி உருவாகவிருக்கிறது, படத்தின் கதை எதை நோக்கி நகர்கிறது என கதையை குறித்து தெளிவான விளக்கத்தை இயக்குனர் கூறவில்லை.

GV Prakash and anandhi in trisha illana nayanthara

இது ஒரு காதல் படம், பள்ளி பருவ போஷன் இருக்கும் எனக்கூறி இருந்தார். ஆனால் இது ஒரு A சான்றிதழ் படம் என எனக்கு தெரியாது, அந்த படத்தில் கொஞ்சமும் விருப்பம் இல்லாமல்தான் நடித்திருந்தேன். படத்தில் நடிக்கும்போது என்னை குட்டை பாவாடை போட சொல்லி இயக்குனர் வற்புறுத்தினார். எனக்கு பிடிக்காத ஆடைகளை எல்லாம் போட சொன்னார்கள். பலமுறை படத்திலிருந்து விலக வேண்டும் என நினைத்திருக்கிறேன். ஆனால் அந்த படத்திற்காக பல ரூபாயை முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளர்களுக்காகவும் படத்திற்காக பணியாற்றி வரும் குழுவினருக்காக மட்டுமேதான் அந்த படத்தை நடித்து முடித்தேன்.

anandhi in trisha illana nayanthara

த்ரிஷா இல்லனா நயன்தாரா படக்குழு மீது எனக்கு மிகுந்த கோபம் இருக்கிறது. அப்படிப்பட்ட படத்திலா நடித்தேன் என, அந்த படத்தை இன்றுவரை நான் பார்த்ததில்லை. இவ்வாறு த்ரிஷா இல்லனா நயன்தாரா குறித்த கசப்பான நினைவுகளை நடிகை கயல் ஆனந்தி பகிர்ந்திருக்கிறார்.