Categories: சினிமா

மல்லிகை பூவை கடித்து சாப்பிட சொன்ன கவிஞர் வாலி… கோபமடைந்து MGR செய்த செயல்…

Spread the love

கவிஞர் வாலி தமிழ் சினிமாவில் பணியாற்றிய கவிஞர், திரைப்பட பாடல் ஆசிரியர் மற்றும் கதை ஆசிரியர் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமி கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதை தொகுப்புகள் மிகவும் புகழ்பெற்றவை. இது மட்டுமில்லாமல் ஆனந்த விகடன் இதழுக்கு இவர் எழுதிய நினைவு நாடாக்கள் என்ற தொடரும் புகழ்பெற்ற ஒன்றுதான்.

வாலி தமிழ் சினிமாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை என்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் வாலி. கையளவு மனசு என்ற தொலைக்காட்சி தொடரிலும் வாலி நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் நிகரற்ற நடிகரும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதருமாக இருந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். இவர் நடித்த படங்கள் பெரும்பாலானவை ஹிட் படங்கள் தான். அதனால் சினிமா வட்டாரங்களில் இவருக்கென்று தனி மரியாதை இருந்தது.

எந்த இயக்குனர்கள் இவரை வைத்து படம் இயக்கினாலும் பாடல் காட்சி என அனைத்தையும் இவரிடம் கலந்து ஆலோசித்து விட்டு தான் தொடங்குவர். கவியரசு கண்ணதாசன் அவர்களும் கவிஞர் வாலி ஆகிய இருவரும் எம் ஜி ஆர் க்கு நெருங்கிய நண்பர்களாவர். அவர் என்ன நினைக்கிறாரோ அப்படியே பாடல்களாக எழுதிக் கொடுப்பவர்கள் இவர்கள் இருவரும் தான். அப்படி ஒரு படத்தின் சூட்டிங் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பற்றி இனி காண்போம்.

டி ஆர் ராமண்ணா இயக்கத்தில் ஒரு படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அந்த படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக எம்ஜிஆர் நடித்திருந்தார். அதில் ஒரு காட்சியில் கதாநாயகி கோயிலுக்கு வரும்போது கதாநாயகி தலையில் இருக்கும் மல்லிகை பூவை எம்ஜிஆர் எடுத்து சாப்பிடுவது போல் காட்சி படமாக்கப்பட்டது. காட்சி முடிந்ததும் எம்ஜிஆர் வாலியிடம் காட்சி எப்படி இருந்தது என்று கேட்டிருக்கிறார். அதற்கு வாலி நீங்கள் மல்லிகை பூவே இன்னும் நன்றாக மென்று கடித்து சாப்பிட்டு இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார் வாலி. உடனே எம்ஜிஆர் அட போயா மல்லிகை பூ எவ்வளவு கசக்குது தெரியுமா என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம்.

ஐயோ எம்ஜிஆர் கோபித்துக் கொண்டாரோ என்று பின்னாடியே எம்ஜிஆர் இடம் போய் நான் மனதில் பட்டதை தான் சொன்னேன் நீங்கள் கோபப்பட்டு விட்டீர்களா என்று கேட்டிருக்கிறார். உடனே எம்ஜிஆர் இல்ல இல்ல நீ என்னுடைய நண்பன் நான் எப்படி கோபப்படுவேன் என்னுடைய நல்லதுக்கு தானே நீ சொல்லி இருக்க என்று சொல்லி அந்த நேரத்திலேயே அந்த காட்சியை மறுபடியும் படம்பிடிக்க வேறொரு ஐடியா செய்திருக்கிறார் எம்ஜிஆர். காட்சியும் படமாக்கப்பட்டு டேக் ஓகே ஆகிவிட்டது. இந்த முறை வாலி சொன்னபடியே பூவை கடித்து சாப்பிட்டு இருக்கிறார் எம்ஜிஆர். ஆனால் அவர் சாப்பிட்டது ரோஜா பூ. இந்த மாதிரி சாமர்த்தியமான காரியங்களை எல்லாம் செய்வதில் வல்லவர் எம் ஜி ஆர்.

admin

Recent Posts

திடீ ர் திருப்பம்… அதிமுகவில் மீண்டும் டி.டி.வி. தினகரன்… தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்…!

அதிமுகவில் டி.டி.வி. தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகக் கோரிக்கை…

1 minute ago

குஷியோ குஷி தமிழகம் முழுவதும் அடுத்த 3 மாதங்களில்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த 3 மாதங்களுக்குள் புதிதாக 2,000 மின்சார ஏசி பஸ்களை…

7 minutes ago

4 மாசமா யாருக்குமே தெரியல… பர்தாவுக்குள் ஒளிந்திருந்த பகீர் உண்மை… 50 சவரன் நகையை நைசாக சுருட்டிய ‘நவநாகரீக’ பெண்… சென்னையில் அடுத்தடுத்து நடந்த அதிரடி கைதுகள்…!

சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் போல பர்தா அணிந்து வந்து, ஊழியர்களின்…

17 minutes ago