காற்றின் மொழி சீரியல் நடிகையா இது..? மார்டன் லுக்கில் கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் பிரியங்கா.. வைரலாகும் போட்டோஸ்..!!

By admin on சித்திரை 8, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ராஜா ராணி சீரியல் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு சஞ்சீவ் நடித்த காற்றின் மொழி சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

   

இந்த சீரியலில் நடிகர் சஞ்சீவுக்கு ஜோடியாக பிரியங்கா என்ற நடிகை நடித்திருந்தார். காற்றின் மொழி சீரியல் தெலுங்கில் ஒளிபரப்பான மௌன ராகம் சீரியலின் ரீமேக் தான். இந்த சீரியல் கடந்த 2019 வருடம் தொடங்கி சுமார் 331 எபிசோடு ஒளிபரப்பாகி 2021 ஆம் ஆண்டு முடிந்தது.

   

 

 

சீரியலில் நடிகை பிரியங்கா கிராமத்து பெண்ணாக ஊமையாக நடித்து அசத்தியிருப்பார். பிரியங்கா சில கன்னட படங்கள், விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா தற்போது மார்டன் உடையில் கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் காற்றின் மொழி சீரியலில் பாவாடை தாவணியோடு வந்த பிரியங்காவா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.