BREAKING: கரூர் துயரம்…. 41 பேரின் வாரிசுதாரர்களுக்கு அரசு பணி…. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு…!

By Nanthini on ஆடி 2, 2026

Spread the love

கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த துயரச் சம்பவத்தின் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தற்போதைய முதல்வர் விஜய் தலைமையிலான அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த தலா ஒருவருக்கு, அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் கூட்டுறவுத்துறை ஆகிய துறைகளில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு அரசு வேலைகளுக்கான பணி நியமன ஆணைகளை வரும் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நேரில் வழங்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார். முதல்வர் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாகக் கரூர் செல்லவுள்ள அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்பதோடு, பாதிக்கப்பட்ட 41 பேரின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்துத் தனது ஆழ்ந்த ஆறுதல்களைத் தெரிவிக்கவுள்ளதாக அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.