தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் நேற்று முன்தினம் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி சுமார் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி உதவியும் விஜய் சார்பில் 20 லட்சம் ரூபாய் நிதி உதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துயர சம்பவம் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலாக அமைந்துள்ளது.
இந்நிலையில் கரூர் துயர சம்பவத்தில் மேலும் ஒரு உயிர் மரணித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சுகுணா என்ற பெண் தற்போது உயிரிழந்துள்ளார். அவரின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறுகின்றனர். தற்போது பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
