Categories: சினிமா

கருப்பு படம் ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கலா? அடப் போங்கப்பா என அப்செட் ஆன நடிகர் சூர்யா ரசிகர்கள்!

Spread the love

நடிகர் சூர்யா நடித்த படம் ரெட்ரோ கடந்த ஆண்டு மே மாதம் 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று வெளியானது. அதன்பிறகு 9 மாதங்கள் கடந்தும் இன்னும் சூர்யாவின் அடுத்த படம் திரைக்கு வரவில்லை. ரெட்ரோ படத்துக்கு பிறகு நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த 45வது படம் கருப்பு. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.

கருப்பு படம் கடந்தாண்டு தீபாவளிக்கே ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்தது. ஆனால் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமம் விற்பனை ஆகாததால் இந்த படம் திரைக்கு வராமல் தள்ளிப் போனது. ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு பிறகு ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுகிறது.கடைசியாக பிப்ரவரி 19ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட இந்த படம் இப்போது ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சூழ்நிலையில் ஏப்ரல் 10ம் தேதியும் இந்த படம் திரைக்கு வருமா என்பதில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக தலைவர்களில் ஒருவர் ஏப்ரல் முதல் வாரத்தில் அதாவது ஏப்ரல் 10 தேதி வாக்கில் தேர்தல் வரப்போகிறது என்று சூசகமாக கூறியிருக்கிறார். அப்படி சட்டசபை தேர்தல் வரும் பட்சத்தில் ஏப்ரல் 10ம் தேதியும் கருப்பு படம் ரிலீஸ் ஆகவில்லை என்றே தகவல் வெளியாகி உள்ளது.

Elango

Recent Posts

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி ‘வெயிட்டிங் லிஸ்ட்’ கவலை வேண்டாம்…. ரயில்வேயின் அதிரடி மாற்றம்…!!

இந்திய ரயில்வேயில் பயணம் செய்யும் பயணிகளின் 'வெயிட்டிங் லிஸ்ட்' டென்ஷனைக் குறைக்க, முன்பதிவுப் பட்டியல் (Chart) தயாரிக்கும் முறையில் புதிய…

6 minutes ago

பெற்றோர்களே உஷார்….! ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ…!!

ஆதாரில் பயோமெட்ரிக் தகவல்களை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ள செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 5…

16 minutes ago

மத்திய அரசு வேலை… கைநிறைய சம்பளம்…! ஆர்பிஐ-யின் புதிய அறிவிப்பு…. விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள 11 இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு…

26 minutes ago

வெங்காயம் இருந்தா போதும்…. கிச்சன் பூச்சிகளுக்கு இனி டாட்டா….! இல்லத்தரசிகளுக்கான சூப்பர் டிப்ஸ்…!!

சமையலறையில் தொல்லை தரும் ஈக்கள், எறும்புகள் மற்றும் கரப்பான் பூச்சிகளை விரட்ட வெங்காயம் மற்றும் பேக்கிங் சோடா கலந்த எளிய…

32 minutes ago

சருமப் பொலிவு முதல் வெயிட் லாஸ் வரை….! கோடை கால ‘சூப்பர் ஃபுட்’ தர்பூசணி…. இவ்வளவு நன்மைகளா…?

கோடை காலத்தின் உஷ்ணத்தைத் தணிக்கும் இயற்கை வரப்பிரசாதமான தர்பூசணி, வெறும் தாகம் தீர்க்கும் பழம் மட்டுமல்லாமல் பல மருத்துவ குணங்களையும்…

36 minutes ago

“ச்சீ!.. இதுக்கெல்லாமா கிளாஸ் எடுப்பீங்க?”… “62 மில்லியன் ஆண்கள்… ஒரு பாலியல் வன்கொடுமைப் பள்ளி”… இணையத்தையே உலுக்கும் ‘டார்க் வெப்’ ரகசியம்….!

இணையத்தின் இருண்ட உலகமான 'டார்க் வெப்' (Dark Web) தளங்களில், 'பாலியல் வன்கொடுமை பயிற்சிப்பள்ளி' ஒன்று செயல்பட்டு வந்தது உலக…

42 minutes ago