பிரபல நடிகரான முரளி நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தின் மூலம் நடிகை ராதா ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ராதாவுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு அவர் நடித்த படங்கள் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. அதனால் சினிமாவில் இருந்து விலகி திருமணம் செய்து கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பைரவி சீரியலில் ராதா நடித்தார். பின்னர் பாரதி கண்ணம்மா 2 சீரியலிலும் நடித்தார் அதன் பிறகு அவரை திரையில் பார்க்க முடியவில்லை.
இதனிடையே முரளி, வடிவேலு மற்றும் ராதா கூட்டணியில் ஒரு பேருந்தை மையமாகக் கொண்டு வெளியான திரைப்படம் தான் சுந்தரா ட்ராவல்ஸ். இந்த திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அதுவும் சென்டிமெண்ட் மற்றும் சீரியஸ் என உணர்வுபூர்வமாக நடிக்கும் முரளிக்குள் இவ்வளவு காமெடி சென்ஸ் இருக்கா என்று தமிழ் சினிமா ரசிகர்களை பிரமிக்க வைத்து இதய நாயகன் முரளியை காமெடி ட்ராக்கில் பயணிக்க வைத்த திரைப்படம் தான் இது.
இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அப்பணத்தின் இரண்டாம் பாகமான “சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட்” கருணாஸ் மற்றும் கருணாகரன் நடிப்பில் உருவாகி வருகின்றது. இது குறித்து இப்படத்தின் நாயகி ராதா சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில், இப்போ சுந்தரா ட்ராவல்ஸ் 2 எடுத்துட்டு இருக்காங்க. சுந்தரா ட்ராவல்ஸ் தயாரித்த தங்கராஜன் சார் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார்.
சுந்தரா ட்ராவல்ஸ் 2 எடுப்பது ரொம்ப பெருமையா இருக்கு. இப்படி ஹிட் படங்களை பார்ட் 2 எடுக்கிறது பாராட்டிற்குரிய விஷயம். 8 வருடங்களுக்கு முன்பே சுந்தரா ட்ராவல்ஸ் 2 எடுக்குறதுல நான் நடிக்க வேண்டி இருந்தது. டிரஸ் எல்லாம் கொஞ்சம் சேஞ்ச் பண்ண சொன்னாங்க. அதனால நான் நடிக்கல. இப்போ உன் திரும்ப ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க. இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துச்சு. ஆனா அம்மா கேரக்டர் என்பதால் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். சுந்தரா ட்ராவல்ஸ் படத்தில் நான் ஹீரோயினியாக நடித்த பெருமையை எனக்கு போதும். நல்ல படங்கள் வந்தால் நிச்சயமாக நடிப்பேன் என்று ராதா பேட்டியளித்துள்ளார்.