Categories: சினிமா

சேது படத்தை ரிலீஸ் செய்ய நான் செய்த உதவி யாருக்குமே தெரியாது… நடிகர் கருணாஸ் பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகளில் ரௌத்திரத்தை ஏற்றி பார்வையாளர்களை திகைத்துப் போக வைக்கும் படங்களை எடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் அவற்றின் உருவாக்கத்தால் இன்றளவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன.

அவர் படங்களில் நடித்த பின்னர்தான் விக்ரம், சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பல இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர் படங்களில் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகிகள் போன இடம் தெரியாமல் காணாமல் போனார்கள்.

சேது படத்தில் நடித்த அபிதா, நான் கடவுள் படத்தில் நடித்த பூஜா, அவன் இவன் படத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜனனி மற்றும் மதுமிதா, பரதேசி படத்தில் நடித்த வேதிகா என யாரும் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரவில்லை என்பதுதான் சோகம்.

#image_title

பாலா இயக்கிய சேது திரைப்படம் ரிலீஸாவதில் மிகப்பெரிய அளவில் தடங்கல்கள் ஏற்பட்டன. படம் ரிலீஸுக்கு முன்பே 100 முறை ப்ர்வ்யூ ஷோ போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள் எல்லாம் ‘படம் நல்லா இருக்கு.. இயக்குனருக்கு நல்ல பெயர் கிடைக்கும். ஆனா ஓடாது” என சொல்லிவிட்டு சென்றுள்ளார்கள்.

இப்படி நடந்த ஒரு பிரிவ்யூ ஷோவில் படத்தைப் பார்த்த கருணாஸ் “இப்படி ஒரு படத்தை எப்படியாவது வெளிவர செய்துவிட வேண்டும் என்று தன்னிடம் இருந்த மூன்று லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டுபோய் சென்னையில் உள்ள தியேட்டர் காரரிடம் கொடுத்து அந்த படத்தை வெளியிட சொன்னேன். ஆனால் அவர் ‘நீ கஷ்டப்பட்டு சம்பாதித்த காசை வேஸ்ட் ஆக்காதே’ என சொல்லி அனுப்பிவிட்டார்.

#image_title

அப்புறம் நான்தான் அந்த படத்தின் ஆடியோவை ஒரு ஆடியோ கம்பெனிக்கு விற்றுக் கொடுத்தேன். ஆனால் நான் செய்த உதவி அந்த பட இயக்குனர் பாலா அண்ணனுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. அந்த படத்தில் வேலைபார்த்த யாருக்குமே இது தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. ஒருவேளை நானே அந்த படத்தை சென்னையில் ரிலீஸ் செய்திருந்தால் நன்றாக சம்பாதித்தும் இருப்பேன்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

6 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

7 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

7 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

7 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

7 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

7 மணத்தியாலங்கள் ago