தமிழ் சினிமாவில் இரு பிரபலங்கள் திருமணம் செய்து பல வருடங்கள் ஒன்றாக இருக்கிறார்கள் என்றால் அவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி கிட்டத்தட்ட 25வருடங்கள் ஒன்றாக பயணிக்கும் தம்பதி கருணாஸ்-கிரேஸ். நடிகர், பாடகர், அரசியல்வாதி என பண்முகத் தண்மைக் கொண்ட கருணாஸ், பின்னணி பாடகி கிரேஸை திருமணம் செய்து கொண்டார். இருவரும் பின்னாளில் ஒன்றாக பணியாற்றியதும் உண்டு. இந்த தம்பதிக்கு கென் என்ற மகனும், டயானா என்ற மகளும் உள்ளது நாம் அறிந்ததே.

#image_title
கென் அசுரன் படத்தில் நடித்து புகழ் பெற்றதோடு, இசையமைப்பிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். மகள் டயானா மருத்துவம் படித்துள்ள நிலையில், இவரது திருமணம் சமீபத்தில் பெங்களூருவில் நடைப்பெற்றது. இந்நிலையில், நடிகர் கருணாஸ் மற்றும் அவருடைய மனைவி கிரேஸ் கருணாஸ் இருவரும் கொடுத்த ஒரு நேர்காணல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

#image_title
அதில் 25ஆண்டு கால திருமண வாழ்வு, இருவரும் எவ்வாறு ஒருவரை ஒருவர் புரிந்து வைத்துள்ளனர் என்பது குறித்து இருவரும் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, நான் மதுபான கடையில் இருந்தால் கூட அதனை மறைக்காமல் மனைவியிடம் கூறி விடுவதாகவும், இருவரும் அந்தளவு ஒருவரை ஒருவர் புரிந்து வைத்துள்ளதாகவும் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி வெளிப்படையாக உள்ளதை பகிர்ந்த கருணாஸின் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது, என்று சொல்ல்லாம்.

#image_title
