விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது .பெரிதும் எதிர்பார்ப்புடன் அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது தற்போது 80 நாட்களை கடந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீசனில் எந்த சீசனுக்கும் இல்லாத அளவு வெறுப்பை கமலஹாசன் ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டை விட்டு நாமினேஷன் முறையில் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதும், பின்னர் அவர்கள் மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்படுவதும் வழக்கம் .அந்த வகையில் இந்த வாரம் விசித்திரா, ரவீனா மற்றும் விக்ரம் மூன்று பேர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் சந்தேகமே இல்லாமல் சரவண விக்ரம் தான் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று பரவலாக கூறப்பட்டு வந்தது.

இதை தொடர்ந்து அவரும் நேற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இதற்கு காரணமாக அவர் பெரிதும் போட்டிகளில் பங்கெடுத்துக் கொள்ளாததும், மிக்சர் போட்டியாளர் என ரசிகர்களால் அழைக்கப்படும் வந்ததும் தான். இது மட்டுமின்றி அவர் தன்னைத்தானே ‘பிக் பாஸ் டைட்டில் வின்னர்’ என்று கூறிக் கொண்டதும் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறி அவரை ட்ரோல் செய்து வந்தனர் .

#image_title
இந்நிலையில் 80 நாட்களுக்கும் மேல் பிக் பாஸ் வீட்டில் இருந்த சரவணன் விக்ரமின் சம்பளம் குறித்த விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி ஒரு எபிசோடுக்கு ரூ.18,000 சம்பளமாக பேசப்பட்டு வீட்டிற்குள் சென்றாராம் சரவணன் விக்ரம். அதன்படி பார்த்தால் தற்பொழுது பல லட்சங்களை சம்பளமாக பெற்றுள்ளார். ‘பிக் பாஸ் வீட்டில் சும்மா மிக்ஸர் சாப்பிட்டு இருந்த நம்ம பிக் பாஸ் டைட்டில் வின்னர் விக்ரமுக்கு இவ்வளவு சம்பளமா?’ என்று ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.
