மாற்றுத்திறனாளிகளுக்கு கருணாநிதியே ‘ROLE MODEL’ ஏனென்றால்… CM ஸ்டாலின் சொன்ன சம்பவம்…!!

By Soundarya on மார்கழி 3, 2025

Spread the love
சென்னையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ‘WILL POWER’ தான் அரசியலுக்கும் அவசியம் என  தெரிவித்துள்ளார். மேலும் அவர் இன்று கூறியதாவது, ‘மாற்றுத்திறனாளிகள் கலைஞரை ‘ROLE MODEL’ ஆக எடுத்து செயல்பட வேண்டும்.
ஏனெனில் ஒரு விபத்தில் கலைஞர் கருணாநிதிக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது, இருந்தாலும் அந்த வலியையும் பொருட்படுத்தாமல் தனது கடைசி மூச்சு உள்ளவரை சமூகத்திற்காக உழைத்தார். முதுமை காலத்தில் சக்கர நாற்காலியில் தான் வலம் வந்தார்” என்று பெருமையாக பேசியுள்ளார்.