தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரு துறைகளில் தனி முத்திரைப் பதித்தவர் கரு பழனியப்பன். அதை எல்லாம் விட அவரை வெகுஜனத்திடம் கொண்டு சேர்ததது அவரின் சுவாரஸ்யமான பேச்சாற்றல்தான். எந்த ஒரு விஷயத்தையும் கேட்பவர்களைக் கட்டிப்போடும் அளவுக்கு பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர் கரு பழனியப்பன்.
அவர் தமிழ் சினிமாவில் பார்த்திபன் கனவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கரு பழனியப்பன். அதன் பின்னர் அவர் இயக்கிய படங்களான சிவப்பதிகாரம், சதுரங்கம் மற்றும் பிரிவோம் சந்திப்போம் ஆகிய படங்கள் அவருக்கு என்று ஒரு அடையாளத்தைப் பெற்றுத்தந்தன.
அதன் பின்னர் அவர் மந்திரப் புன்னகை என்ற படத்தை இயக்கி அதில் கதாநாயகனாக நடித்தார். அந்த படம் அட்டர் ப்ளாப் ஆனது. அதன் பின்னர் அவர் சினிமா வாழ்க்கையில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் இயக்கிய நடித்த படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை.
இதனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அவர் பணியாற்றி வருகிறார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழா தமிழா ,இந்த நிகழ்ச்சி நீயா நானா போல ஒரு விவாத நிகழ்ச்சியாக அமைந்தது. ஆனால் அதன் பின்னர் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி, கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘நேர்ப்பட பேசு’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றினார். அதன் பின்னர் இப்போது பேச்சாளராக திமுக ஆதரவாளராக பல மேடைகளில் பேசி வருகிறார்.

சினிமா பற்றி தொடர்ந்து பேசிவரும் அவர் சில மாதங்களுக்கு முன்னர் அளித்த ஒரு நேர்காணலில் பேசும்போது “தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் நல்ல நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதியும் ஒருவர். ஆனால் அவருக்கு நிலையான ஒரு மார்க்கெட் இருக்கிறதா என்றால், எல்லோரும் யோசிக்கிறார்கள். ஏனென்றால் அவர் வித்தியாசமானக் கதைக்களங்களில் நடிக்கிறார்.
அதனால் இந்த படத்தில் என்ன பண்ணி வைத்துள்ளாரோ என யோசிக்கிறார்கள். அதனால் மற்ற ஹீரோக்களைப் போல அவரை நம்ப மறுக்கிறார்கள். ஆனால் எனக்கு இதுதான் வேண்டும். நான் இப்படிதான் வித்தியாசமாக நடிப்பேன் என்று விஜய் சேதுபதி முடிவெடுத்திருக்கிறார் அல்லவா? அது பாராட்டப் படவேண்டும்” எனக் கூறியுள்ளார்.
