எங்க விவாகரத்துக்கு காரணமே அவர் தான்.. ராமராஜன் உடனான பிரிவு பற்றி ஓப்பனாக பேசிய நளினி..!

By Nanthini on மாசி 18, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகை நளினி. 90களில் மிகப் பிரபலமான மற்றும் பிசியான நடிகையாக இருந்த இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் மோகன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன்னுடைய நடிப்பால் கட்டிப் போட்டவர். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த நளினி ஒரு கட்டத்தில் தன்னுடன் நடித்த நடிகர் ராமராஜனை காதலித்த திருமணம் செய்து கொண்டார்.

நாம் பிரிந்துவிடுவோம் என்று திருமணம் ஆனபோதே சரியாக ஜோசியம் சொன்னார் ராமராஜன்...  நளினி உருக்கம் | Astrologer Predicted my Seperation with Ramarajan at the  time of our ...

   

ராமராஜனும் மிகப் பெரிய நடிகர் தான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்கள் இருவரும் சில காலம் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த நிலையில் அதன் பிறகு மனக்கசப்பு ஏற்பட விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். தற்போது நளினி விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் சில படங்களிலும் சீரியல்களிலும் அடுத்தடுத்து நடித்து வருகின்றார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடிகை நளினி நடித்துள்ளார்.

   

எதிர்காலத்தில் பிரிவோம் என்று திருமணத்தின் போதே நளினியிடம் ஜோதிடம் சொன்ன  ராமராஜன்! உண்மையான பரிதாபம் - லங்காசிறி நியூஸ்

 

இந்த நிலையில் நளினியின் பிரபல youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில், ஹீரோவாக பார்த்த ராமராஜனை விட கணவராக பார்த்த ராமராஜன் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் நான் இப்போ தும்ப போகிறேன் என்றால் கூட அது அவருக்கு தெரியும். அந்த அளவுக்கு அவர் நல்ல மனுஷன். ஏழு ஜென்மம் எடுத்தாலும் அவர்தான் எனக்கு மீண்டும் கணவராக வேண்டும் என்று தான் கடவுளிடம் வேண்டிக் கொள்வேன். நானும் அவரும் தற்போது கூட நன்றாக தான் பேசிக் கொண்டிருக்கிறோம்.

விவாகரத்துக்கு பிறகு ராமராஜன் பற்றி வெளிப்படையாக, உருக்கமாக பேசிய நடிகை  நளினி.. காரணம் "அவர்"தானாம் | Actress Nalini's information about her  ex-husband Ramarajan ...

எங்கள் வீட்டில் பிள்ளைகள் அல்லது பேரக் குழந்தைகளுக்கு ஏதாவது விசேஷம் வந்தால் அவரும் வருவார். அப்போது இருவரும் நன்றாகத்தான் பேசிக் கொள்வோம். எங்களுக்கு நேரம் சரியில்லை. நாங்கள் பிரிந்து இருந்தால் நல்லது, பிள்ளைகள் தந்தையுடன் இருந்தால் நல்லது இல்லை என்று ஜாதகர் ரீதியான காரணங்களால் தான் நாங்கள் விவாகரத்து பெற்றோம். அவருக்கு ஜாதகத்தின் மீது பெரிய நம்பிக்கை. விவாகரத்து செய்யும்போது கூட அவர் என்னுடைய கையைப் பிடித்துக் கொண்டுதான் இருந்தார் என தங்கள் விவாகரத்துக்கான காரணம் குறித்து நளினி வெளிப்படையாக பேசியுள்ளார்.