Categories: சினிமா

மணிவண்ணனை எந்த வகையிலும் அடையாளப்படுத்த முடியாது… அவரோட ஸ்பெஷாலிட்டி இதுதான் –கரு பழனியப்பன் சொன்ன ஆச்சர்யத் தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் கலக்கியவர் மணிவண்ணன். இன்றைய இளைஞர்கள் பலருக்கு அவர் ஒரு வெற்றிப்பட இயக்குனர் என்பது தெரியாத தகவலாக இருக்கும். சத்யராஜ், மோகன் மற்றும் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர்.

கோயம்புத்தூரைப் பூர்விகமாக கொண்ட மணிவண்ணன், நடிகர் சத்யராஜின் கல்லூரித் தோழர். பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தை பார்த்த மணிவண்ணன் அந்த படத்தைப் பாராட்டி 50 பக்கத்து மேல் ஒரு விமர்சன மதிப்புரையை அவருக்கு எழுதி அனுப்பியுள்ளார். அதை படித்து பார்த்து வியந்த பாரதிராஜா, அவரை சென்னைக்கு வரவழைத்து தன்னுடைய உதவி இயக்குனராக சேர்த்துக்கொண்டார்.

மணிவண்ணன் சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய நிலையில் தான் இயக்கிய நிழல்கள் படத்துக்கு மணிவண்ணனை கதை வசனம் எழுத வைத்தார் பாரதிராஜா. அந்த படம் தோல்வி படமாக அமையவே  மீண்டும் அவரை அலைகள் ஓய்வதில்லை படத்துக்கு வசனம் எழுதவைத்து ஹிட் கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் மணிவண்ணனை நடிகராக அறிமுகப்படுத்தியதும் பாரதிராஜாதான். தன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கொடி பறக்குது திரைப்படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தினார்.

#image_title

அதன் பின்னர் அவர் கோபுரங்கள் சாய்வதில்லைப் படம் மூலமாக இயக்குனர் ஆகி 50 படங்கள் வரை இயக்கியுள்ளார். நடிகராகவும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மணிவண்ணன் பற்றி இயக்குனர் கரு பழனியப்பன் பகிர்ந்துள்ள தகவல் ஒன்று கவனம் பெற்றுள்ளது.

அதில் “எனக்கு தமிழ் சினிமாவில் மிகவும் பிடித்தது இயக்குனர் மணிவண்ணன்தான். அவர் ஒருவர்தான் எந்தவொரு ஜானரிலும் தன்னை அடைத்துக் கொள்ளாமல் எல்லா ஜானரிலும் படம் பண்ணி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அவர் காதல் படம் பண்ணியிருக்கிறார்; அரசியல் படம் பண்ணியிருக்கிரார்; கதாநாயகன் இல்லாமல் படம் பண்ணியிருக்கிறார். இப்படி எல்லா வகை படங்களிலும் அவர் ஒரு சில்வர் ஜூப்ளி படம் வைத்திருக்கிறார்.” எனப் பேசியுள்ளார்.

vinoth

Recent Posts

BIG NEWS: 2 திமுக MLA-க்களிடம் ராஜினாமா பேரம்…. ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட பகீர் தகவல்…. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா…

2 minutes ago

கஞ்சா வெறி… கதவைத் திறந்த 60 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை… 23 வயது இளைஞர் செய்த வெறிச்செயல்…!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…

20 minutes ago

வெளியே சிரித்த முகம்… உள்ளே ரத்த வெறி… சமூக வலைதள பிரபலம் நிஷாவின் கொலையில் வெளியான பகீர் பின்னணி…!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக சமூக வலைதள பிரபலமும் அழகுக்கலை நிபுணருமான நிஷா சவுகான்…

38 minutes ago

சந்தேகப் பேய்க்கு பலியான 3 உயிர்கள்… 4 மாத கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கணவனின் வெறிச்செயல்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…

49 minutes ago

ஓட்டுநரின் கழுத்தைப் பிடித்த பயணி… 40 உயிர்களைப் பலிவாங்கிய பேருந்து விபத்தின் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை…!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…

1 மணத்தியாலம் ago

அவன் கூட பேசாத… மற்றொரு கள்ளக்காதலனைத் தீர்த்துக்கட்டிய பெண்… காவிரி ஆற்றில் மிதந்த சாக்குமூட்டை… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி நாடகம்…!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று…

1 மணத்தியாலம் ago