திமுக 75 ஆவது அறிவுத் திருவிழாவில் நேற்று “வரலாற்றைப் படிப்போம் வரலாற்றைப் படைப்போம்” எனும் தலைப்பில் இயக்குனர் கரு பழனியப்பன் சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், இங்கு விஜய் வீட்டுக்குத்தி பக்கத்தில் இருப்பவர்கள் யாராவது வந்திருக்கிறீர்கள் என்றால் “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” புத்தகத்தை என்னிடமிருந்து பெற்றுக் கொண்டு போய் அவரிடம் கொடுங்கள். அவர் படிக்கட்டும். விஜய் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் ஐம்பெருங்குழு மற்றும் எண்பெயராயம் போன்ற வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி இருந்தார் .ஆச்சரியமாக இருந்தது.
மிகப்பெரிய இலக்கியவாதி தான் அவருக்கு இதை எழுதி கொடுத்து இருக்க வேண்டும். எனக்கு எழுத்தாளர் ஜெயமோகன் மீதுதான் சந்தேகம். முதலில் விஜய் அந்த இரண்டு வார்த்தைகளுக்கும் பொருள் சொல்ல வேண்டும். TVK மாநாடு நடந்த அனைத்து இடத்திலும் பார்த்திருப்பீர்கள் நிர்வாகிகளுக்கும் விஜய்க்கும் நடுவில் 8 அடி இடைவெளி இருக்கும். ஏனெனில் மனித வாடையே விஜய்க்கு ஆகாது. ஆனால் கரூர் சம்பவத்திற்கு பிறகு செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகளின் தோளோடு உரசிக்கொண்டு அமர்ந்திருந்தார் என்று கூறியுள்ளார்.
