தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்து விட்டது. ஏப்ரல் மாதம் கடைசிக்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டு போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிக்கு தயாராகி வருகின்றனர்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜயின் அடுத்த திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது. ஏனென்றால் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கின்றார். அடுத்த திரைப்படத்துடன் தனது நடிப்பை விட்டு விட்டு முழு நேரமும் அரசியலில் இறங்க உள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் நடிகர் விஜய்யின் கடைசி படத்தை யார் இயக்குவது என ஒரு கேள்வி நிலவி வருகின்றது.
அட்லி, கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன் என தொடர்ந்து பல பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் கடைசியில் ஹச் வினோத் தான் இயக்கப் போகிறார் என்று கூறி வந்தனர். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் அவரின் தந்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதில் விஜயை சந்தித்து தனது மகன் கதை கூறியதாகவும், பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் தற்போது கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்குவது முடிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.