Categories: CINEMA

ரோலக்ஸயே மிஞ்சும் அளவுக்கு இருக்கே இந்த கெட்டப்.. ஷாட் வீடியோ வெளியிட்ட சூர்யா44 படக்குழு..!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கும் 44வது படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்ட நிலையில் அதன் ஃபர்ஸ்ட் ஷார்ட் வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். அதனை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் சரித்திர படமாக உருவாகியுள்ளது. மேலும் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

இதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் திரைப்படம் தான் சூர்யா 44.  நடிகர் சூர்யா ஜோதிகாவின் 2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் இந்தத் திரைப்படத்தை தயாரிக்கின்றது. மேலும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கின்றார்.

மேலும் கருணாகரன், ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நிலையில் சந்தோஷ நாராயணன் இசையமைக்கின்றார். இப்படத்தில் பணியாற்றக்கூடிய நடிகர்கள், நடிகைகள் குறித்து விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

இந்நிலையில் இன்று இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் தொடங்கியுள்ளது.. நடிகர் சூர்யா மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் எடுக்கப்பட்ட முதல் காட்சியை படக் குழுவினர் பகிர்ந்து இருந்தார்கள். கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யாவை வைத்து எடுத்த ஜிகர்தண்டா டுப்லெக்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது சூர்யாவை வைத்து இப்படத்தை எடுத்து வருகின்றார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் ஷார்டில் சூர்யாவை பார்த்த ரசிகர்கள் பலரும் விக்ரம் திரைப்படத்தில் பார்த்த ரோலக்சை காட்டிலும் பயங்கரமாக இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போதைய இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

6 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

6 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

6 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

7 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

7 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

7 மணி நேரங்கள் ago