இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கும் 44வது படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்ட நிலையில் அதன் ஃபர்ஸ்ட் ஷார்ட் வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். அதனை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் சரித்திர படமாக உருவாகியுள்ளது. மேலும் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
இதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் திரைப்படம் தான் சூர்யா 44. நடிகர் சூர்யா ஜோதிகாவின் 2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் இந்தத் திரைப்படத்தை தயாரிக்கின்றது. மேலும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கின்றார்.

மேலும் கருணாகரன், ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நிலையில் சந்தோஷ நாராயணன் இசையமைக்கின்றார். இப்படத்தில் பணியாற்றக்கூடிய நடிகர்கள், நடிகைகள் குறித்து விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் இன்று இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் தொடங்கியுள்ளது.. நடிகர் சூர்யா மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் எடுக்கப்பட்ட முதல் காட்சியை படக் குழுவினர் பகிர்ந்து இருந்தார்கள். கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யாவை வைத்து எடுத்த ஜிகர்தண்டா டுப்லெக்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது சூர்யாவை வைத்து இப்படத்தை எடுத்து வருகின்றார்.
![]()
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் ஷார்டில் சூர்யாவை பார்த்த ரசிகர்கள் பலரும் விக்ரம் திரைப்படத்தில் பார்த்த ரோலக்சை காட்டிலும் பயங்கரமாக இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போதைய இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Lights! Camera!! Action!!!#Suriya44FirstShot#LoveLaughterWar ❤️🔥 #AKarthikSubbarajPadam📽️ Begins Today@Suriya_Offl @karthiksubbaraj @hegdepooja @Music_Santhosh @rajsekarpandian @kaarthekeyens @kshreyaas @cheps911 @jacki_art @JaikaStunts @PraveenRaja_Off #Jayaram #Karunakaran… pic.twitter.com/JrYRwgywQa
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) June 2, 2024
