பிரபல நடிகரான விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் யாரும் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் ஜில்லா திரைப்படம் ரிலீஸ் ஆனது.
இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை ஆர்டி நேசன் இயக்கினார். இதில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்தார். மேலும் மோகன்லால், தம்பி ராமையா, பூர்ணிமா பாக்யராஜ், நிவேதா தாமஸ், சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்தது. ஜில்லா படத்திற்கு டி.இமான் இசையமைத்தார்.
போலீஸ் அதிகாரியாக இருக்கும் வளர்ப்பு மகனுக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் வன்முறை, பாச போராட்டம், சட்டரீதியான அணுகுமுறை ஆகியவற்றை மையமாக வைத்து கதைகளம் உருவானது. இந்த படம் ரசிகர்களிடையே மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஜில்லா படத்தில் விஜய் நடிக்கும் போது எடுத்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இதோ அந்த வீடியோ..
View this post on Instagram